அடேங்கப்பா! ஒரு பாட்டில் விஸ்கி 1 கோடி ரூபாயா?
உலகின் மிகப் பழமையான விஸ்கி என்று கூறப்படும், சுமார் 250 ஆண்டுகள் பழமையான ஒரு பாட்டில் விஸ்கி 1 கோடி ரூபாய்க்கு மேல் ஏலத்தில் விற்கப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிகப் பழமையான இங்க்லெட் (Ingledew) விஸ்கி தான் ஒரு கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது. 1860-ஆம் ஆண்டில் பாட்டிலில் அடைக்கப்பட்ட இந்த விஸ்கி, அதற்கும் ஒரு நூற்றாண்டு முன்னரே தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
உலகின் மிகப் பழமையான இந்த விஸ்கி, உலகின் மிக அதிகமான விலையுள்ள விஸ்கி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. சுமார் 250 ஆண்டுகள் பழமையான இந்த விஸ்கி, அண்மையில் 137,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் விடப்பட்டது.
இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆகும். விஸ்கி அதன் அசல் விலையை விட ஆறு மடங்கு அதிகமாக ஏலத்தில் வைக்கப்பட்டது. இதே காலக்கட்டத்தை சேர்ந்த ஒரு பாட்டில் பழைய ஸ்காட்ச் கிட்டத்தட்ட 2 மில்லியன் டொலர்களுக்கு விற்கபடுவது குறிப்பிடத்தக்கது.
1860-களில் பாட்டிலில் அடைக்கப்பட்ட இந்த விஸ்கி, அதற்கு 100 ஆண்டுகள் முன்பு தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. "இந்த விஸ்கி அநேகமாக 1865-க்கு முன்பு தயாரிக்கப்பட்டது, இது ஜே.பி. மோர்கனின் பாதாள அறையில் இருந்தது. மோர்கனின் மறைவுக்குப் பிறகு பாட்டில் அவரது பண்ணை வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது" என பாட்டிலின் லேபிளில் குறிப்பிடப்பட்டுளது.
இந்த பாட்டில் 20,000 முதல் 40,000 அமெரிக்க டொலர் வரை விலைபோகும் என ஏல நிறுவனமான ஹவுஸ் ஸ்கின்னர் இன்க். (Auction house Skinner Inc.) மதிப்பிட்டிருந்தது.
இருப்பினும், ஜூன் 30-அன்று முடிவடைந்த ஏலத்தில் மிட்டவுன் மன்ஹாட்டனில் உள்ள அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான தி மோர்கன் நூலகத்திற்கு 137,500 அமெரிக்க டாலர்களுக்கு பாட்டில் விற்கப்பட்டது.
இந்த விஸ்கி1763 மற்றும் 1803-க்கு இடையில் தயாரிக்கப்பட்டிருக்க 53 சதவிகிதம் வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் குழு மதிப்பிட்டது. அப்படியென்றால் இந்த விஸ்கி 1770-களின் புரட்சி மற்றும் 1790-களின் விஸ்கி கிளர்ச்சியையும் பார்த்திருக்கிறது.