லொட்டரியில் பெருந்தொகை வென்ற இந்திய வம்சாவளி கனேடியர்: சந்தேகம் எழுப்பிய நிர்வாகம்
கனடாவில் பிராம்டன் பகுதியை சேர்ந்த நபர் லொட்டரியில் பெருந்தொகை வென்றுள்ள நிலையில், ஒன்ராறியோவின் லொட்டரி நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சில்லறை விற்பனையாளராக
பிராம்டன் பகுதியில் குடியிருப்பவர் ரோஷன்குமார் காந்தி. இவருக்கு லொட்டரியில் 62,000 கனேடிய டொலர் பரிசாக கிடைத்துள்ளது.
ஆனால் தொடர்புடைய நபர் OLG எனப்படும் லொட்டரி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளராக பணியாற்றுகிறாரா என்பது தொடர்பில் மதிப்பாய்வு செய்து சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதாவது லொட்டரி வெற்றியாளர் ஒருவர், OLG எனப்படும் லொட்டரி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளராக பணியாற்றுபவராக இருந்து, 10,000 கனேடிய டொலருக்கு மேல் பரிசாக வென்றால் அது மதிப்பாய்வு செய்து சரிபார்க்க வேண்டும் என்பதை விதியாக கொண்டுள்ளனர்.
உறுதி செய்துள்ள OLG
மேலும், அந்த லொட்டரிக்கு வேறு எவரும் உரிமையாளர்கள் உள்ளனரா என்பது குறித்து உறுதி செய்ய 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். இந்தியரான ரோஷன்குமார் காந்தி விவகாரத்தில் அவர் Father Tobin சாலையில் அமைந்துள்ள RAJ Kitchen Food Fair என்ற கடையில் இருந்தே லொட்டரி வாங்கியுள்ளார்.
அத்துடன் அவர் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளராக பணியாற்றுபவராகவும் இல்லை என்பது OLG தற்போது உறுதி செய்துள்ளது.
மேலும், அவர் வென்றுள்ள லொட்டரி தொடர்பில் இதுவரை எவரும் உரிமை கோராத நிலையில், பிப்ரவரி 10ம் திகதி பரிசு தொகையை அவர் பெற்றுக்கொள்ளலாம் என்றும் OLG நிர்வாகம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |