ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க இந்த ஒரு எண்ணெய் போதும்
உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பெரும்பாலோருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
உடல் எடை அதிகரிக்க தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க ஆலிவ் எண்ணெய் ஒன்னு போதும். இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலுக்கு நிறைவான உணர்வை அளிக்கும் பல பண்புகள் உள்ளன.
தினமும் உணவில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துபவர்களால் உடல் எடையை குறைக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆலிவ் எண்ணெயில் உள்ள அதிகமான கலோரிகள் வயிற்றை நிரம்பிய உணர்வை அளிக்கிறது. இதன் காரணமாக தேவையற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
மேலும் இந்த எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்வதால் துரித உணவுகள், இனிப்புகள், எண்ணெய் உணவுகளை உண்ணும் ஏக்கம் குறைந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
எனினும், ஆலிவ் எண்ணெயில் கலோரிகள் அதிகமாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இல்லை. எனவே அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக் கூடாது.
ஆலிவ் எண்ணெயின் பிற நன்மைகள்
இதில் ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் அதிகமாக உள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
ஆலிவ் எண்ணெய் உட்கொள்பவர்களுக்கு அல்சைமர் நோய் குறைவாக வருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆலிவ் எண்ணெய் இதய பாதுகாப்பிற்கு நல்லது.
மேலும், ஆலிவ் எண்ணெய் செரிமானத்தை சீராக்குகின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |