1 பந்தில் 4 ஓட்டங்கள் தேவை: பின்னே திரும்பி சிக்ஸ் அடித்த 19 வயது வீரர்..அதிர்ந்த மைதானம் (வீடியோ)
பிக் பாஷ் லீக் போட்டியில் ஒலிவர் பீக் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க, மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுருண்ட பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி
மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெர்த்தில் நடந்தது.
Six and OUT! ❌
— KFC Big Bash League (@BBL) January 7, 2026
Sutherland hits it to the boundary but is gone next ball. #BBL15 pic.twitter.com/HmJ8F3rcT1
முதலில் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 19.2 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக ஆரோன் ஹார்டி 40 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் எடுத்தார். குரிந்தர் சந்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஒலிவர் பீக் அதிரடி
பின்னர் களமிறங்கிய மெல்போர்ன் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் 19 வயது இளம் வீரரான ஒலிவர் பீக் (Oliver Peake) அதிரடியில் மிரட்டினார்.

கடைசி பந்தில் மெல்போர்ன் அணியின் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஹார்டி வீசிய பந்தை, பீக் ஆப்சைடுக்கு நகர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக, பின்னால் சிக்ஸ் அடித்தார். இதன்மூலம் அவர் போட்டியின் ஹீரோவாக மாறினார்.
OLI PEAKE!! He hits a SIX to win the game off the final ball! 🤯 #BBL15 pic.twitter.com/2jZ2lFecdg
— KFC Big Bash League (@BBL) January 7, 2026
மெல்போர்ன் ரெனெகேட்ஸ் ரசிகர்கள் இந்த சிக்ஸை பார்த்து ஆரவாரம் செய்தனர். ஒலிவர் பீக் 30 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்றார்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |