அவுஸ்திரேலியாவில் இரகசிய திருமணம்..பிரித்தானியாவில் ஒலிவியாவின் பிரம்மாண்ட கொண்டாட்டம்
பிரித்தானியாவில் முன்னாள் கால்பந்து வீரர் கிரேக் ரூதர்போர்ட், ஒலிவியா ஆகியோரது திருமண கொண்டாட்டம் நடந்தது.
அவுஸ்திரேலியாவில் இரகசிய திருமணம்
அவுஸ்திரேலியாவின் நட்சத்திரம் ஒலிவியா ஃப்ரேசரும் (Olivia Frazer), பிரித்தானியாவின் முன்னாள் கால்பந்து வீரர் கிரேக் ரூதர்போர்ட் (Greg Rutherford) இருவரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரகசியமாக திருமணம் செய்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, தற்போது இந்த ஜோடி பிரித்தானியாவில் உள்ள தங்கள் அன்புக்குரியவர்களுக்காக ஒரு பெரிய கொண்டாட்டத்தை நடத்தியுள்ளனர்.
இருவரும் Warwickshire-யில் உள்ள Stratford-upon-Avon-யில் நடந்த இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி
கடந்த 3ஆம் திகதி திருமணம் செய்துகொண்ட டெய்லர் ஸ்விஃப்ட்டைக் குறும்புத்தனமாகக் குறிப்பிடும் வகையில், ஒலிவியா தனது புகைப்படங்களுக்கு, 'Blank Space' பாடலில் வரும் பாடலின் 'ஆகவே, இது என்றென்றும் நிலைத்திருக்கும்' என்ற பாடல் வரியைத் தலைப்பாகக் கொடுத்திருந்தார்.
பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தனது காதலரான ரூதர்போர்டினை மணந்துள்ளார் ஒலிவியா.
MAFS நிகழ்ச்சியின் 9வது சீஸனில் புகழ்பெற்ற ஒலிவியா, சர்ச்சைக்குரிய அந்த நிகழ்ச்சி 'தன் வாழ்க்கையை நாசமாக்கியது' என்று வெளிப்படையாக பேசியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |