ஒலிம்பிக் போட்டியால் பிரான்சுக்கு லாபத்துக்கு பதிலாக பெரும் இழப்பு: அரசு ஏமாற்றம்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 26ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், பிரான்ஸ் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
ஆனால், ஒலிம்பிக்கால் பிரான்ஸ் வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும், சுற்றுலா வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்த்த பிரான்ஸ் அரசுக்கு ஏமாற்றமே கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் என்ன?
பிரான்ஸ் அரசு ஒலிம்பிக் போட்டிகளையொட்டி எக்கச்சக்கமான சுற்றுலாப் பயணிகள் பிரான்சுக்கு வருவார்கள் என்று நம்பி, சுமார் 7.5 பில்லியன் யூரோக்கள் வரை செலவு செய்துள்ளது.
ஆனால், பிரான்சின் எதிர்பார்ப்புக்கு எதிராக, ஒலிம்பிக் நேரத்தில் பிரான்சுக்கு சுற்றுலா சென்றால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும், சுற்றுலாவை என்ஜாய் செய்யமுடியாது என சுற்றுலாப்பயணிகள் எண்ணுவதாகத் தெரிகிறது.
ஆகவே, ஹொட்டல்களில் எதிர்பார்த்த அளவுக்கு முன்பதிவு எதுவும் நடக்கவில்லை என்கிறது டெலிகிராப் பத்திரிகை.
அத்துடன், விமானத் துறையும், சுற்றுலா ஏஜண்டுகளும் ஏமாற்றமளிக்கும் செய்தியையே தெரிவித்துள்ளார்கள்.
இந்தக் காலாண்டில், விமானத்துறைக்கு மட்டுமே சுமார் 180 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படும் என டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |