4 ஒலிம்பிக் தங்கப்பதங்கங்களை வென்ற அவுஸ்திரேலிய வீராங்கனை: நீண்ட நாள் காதலருடன் திருமணம்
அவுஸ்திரேலிய ஒலிம்பிக் வீராங்கனை கேட் கேம்ப்பெல் (Cate Campbell) தனது நீண்டகால காதலரை கரம்பிடித்தார்.
Australian Olympian cate campbell married her boy friend: ஒலிம்பிக் வீராங்கனையான கேட் கேம்ப்பெல் அவுஸ்திரேலியாவில் தனது நீண்டகால காதலரான ஆடம் கெர்ரை திருமணம் செய்துகொண்டார்.
அவுஸ்திரேலிய ஒலிம்பிக் வீராங்கனை
ஒலிம்பிக்கில் 4 தங்கப்பதக்கங்கள் உட்பட எட்டு பதக்கங்களை வென்றவர் கேட் கேம்ப்பெல் (Cate Campbell).
பிறந்தநாள் வாழ்த்துக் கூறி... நேபாளத்தில் இருந்து பெற்றோரின் குரலுக்காக காத்திருக்கும் சிட்னி இளைஞர்
34 வயதாகும் இவர், தனது நீண்டகால காதலரான ஆடம் கெர் என்பவரை அவுஸ்திரேலியாவின் ஹிண்டர்லேண்டில் நடந்த ஒரு பிரமிக்க வைக்கும் திறந்தவெளி விழாவில் மணந்தார்.
புகழ்பெற்ற நீச்சல் வீராங்கனையான கேட், பல புகைப்படங்களுடன் இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

'எங்கள் நாளின் ஒரு சிறு காட்சி இதோ' என்ற வார்த்தைகளுடன் அவர் அதனை பதிவிட்டார். அவரது இந்த அறிவிப்பிற்கு பிறகு வாழ்த்துக்கள் குவிந்தன.
கேட்டின் சக சிறந்த நீச்சல் வீரர்களான கிராண்ட் ஹாக்கெட், லிப்பி ட்ரிக்கெட் மற்றும் மைக்கேல் கிளிம் ஆகியோரும் இனிமையான செய்திகளை பகிர்ந்துகொண்டனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |