ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்தவீரர்: மோசமான குற்றம் செய்ததாக பாரீஸில் கைது
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ஒருவர், பாரீஸில் மோசமான குற்றம் ஒன்றைச் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்தவீரர் கைது
எகிப்து நாட்டு மல்யுத்த வீரரனான முகமது (Mohamed Elsayed) என்பவர், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டபின், பெண்ணொருவரை பாலியல் ரீதியாக தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Image: Jack GUEZ / AFP
முழு போதையிலிருந்த முகமது, நேற்று அதிகாலை 4.30 மணியளவில், பெண்ணொருவரின் பின்பக்கத்தைத் தவறாக தொட்டதாக அந்தப் பெண் பொலிசில் புகாரளித்துள்ளார்.
எகிப்து ஒலிம்பிக் கமிட்டி, முகமது மீது துறைசார்ந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், அவர் மீதான் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், அவர் மீது தடைகள் விதிக்கப்படும் என்றும், அவர் வாழ்நாள் முழுவதும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார் என்றும் தெரிவித்துள்ளது.
Image: Tom Pennington/Getty Images
முந்தைய ஒலிம்பிக்கில் டோக்கியோவில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றவரான முகமது, இம்முறை அஜர்பைஜான் வீரரான Hasrat Jafarovஇடம் தோல்வியடைந்தார். பின்னர் Hasrat Jafarov வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |