மோசமான கிருமிகள் இருப்பதாக கூறப்பட்ட Seine நதியில் நீந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு வாந்தி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நிகழ்ந்துவரும் நிலையில், Seine நதியில் நீச்சல் ஓட்டியில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகள் வாந்தி எடுக்கும் நிலை ஏற்பட்டது.
அருவருப்பான நதி நீர்
Seine நதி நீந்துவதற்கு தகுதியானது அல்ல என்பதால்தான் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நதியில் நீந்த தடை விதிக்கப்படுள்ளது.
ஆனால், ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக அவசர அவசரமாக நதியை சுத்தம் செய்தது பிரான்ஸ் அரசாங்கம்.
ஆனால், 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த நதியை எப்படி சுத்தம் செய்வது.?
ஆக, சுத்தம் செய்ததாக கூறினாலும், நதி நீர் அருவருப்பாகத்தான் இருந்தது என்கிறார் ட்ரையத்லான் போட்டிகளுக்காக அந்நதியில் நீந்திய பெல்ஜியம் நாட்டு வீராங்கனையான Jolien Vermeylen.
குறிப்பாக, பாலத்துக்கு அடியில் நீந்தும்போது நான் கண்ட அருவருப்பான காட்சிகளை மீண்டும் நினைத்துப்பார்க்கக்கூட முடியாது அந்த அளவுக்கு அருவருப்பாக இருந்தது என்கிறார் அவர்.
நிறைய தண்ணீரை குடித்துவிட்டேன். நாளைதான் எனக்கு மட்டுமல்ல, என்னைப்போலவே நதியில் நீந்திய எத்தனைபேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படப்போகிறது என்பது தெரியவரும் என்கிறார் Jolien Vermeylen.
வாந்தி எடுத்த வீரர்கள்
இதற்கிடையில், கனேடிய வீரரான Tyler Mislawchuk நீந்திக் கரையேறிய சிறிது நேரத்தில் வாந்தி எடுக்கத் துவங்கினார். தான் 10 முறை வாந்தி எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து, வெள்ளிப்பதக்கம் வென்ற Hayden Wilde உட்பட, நீச்சல் போட்டியை முடித்த பல வீரர்கள் நிலைகுலைந்து சரிந்துள்ளார்கள்.
’இந்த போட்டி நடைபெறவில்லையானால் ஒலிம்பிக் அமைப்புக்கும் பிரான்சுக்கும் அவமானம். ஆகவேதான் அவர்கள் போட்டியை நடத்திவிட்டார்கள்.
ஆனால், நாளை நீச்சல் வீரர் வீராங்கனைகள் உடல் நலம் பாதிக்கப்படாமல் இருந்தால் போதும் என அவர்கள் வேண்டிக்கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை’ என்கிறார் Jolien Vermeylen.
Fair play Alex Yee ?? that was brutal! Bloke has nothing left but he’s taking ? home! Class ? #Olympic2024 #TeamGB pic.twitter.com/NgAmy5sOr8
— SUTTS (@007Sutts) July 31, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |