அஞ்சியது போலவே நடந்துவிட்டது: பாரீஸ் நதியில் கிருமிகள் தொற்றால் மருத்துவமனையில் வீராங்கனை
பாரீஸ் ஒலிம்பிக்கில், நீச்சல் போட்டிகள் நடைபெறும் நதியில் மோசமான கிருமிகள் இருப்பதால், அந்நதியில் நீந்தும் வீரர் வீராங்கனைகள் நோய்வாய்ப்படக்கூடும் என்ற அச்சம் நீண்ட நாட்களாகவே நிலவிவருகிறது.
அஞ்சியதுபோலவே, தற்போது நதி நீரில் நீந்தியதால் ஒரு வீராங்கனை நோய்வாய்ப்பட, அவரது அணி போட்டியிலிருந்தே விலகும் நிலை ஏற்பட்டுவிட்டது.
பாரீஸ் நதியில் கிருமிகள் தொற்றால் ஆபத்து
Image: JASPER JACOBS/BELGA MAG/AFP via Getty Images
பாரீஸிலுள்ள Seine நதியில் ட்ரையத்லான் போட்டிகள் நடத்துவது குறித்து, ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பிருந்தே சர்ச்சை நிலவிவருகிறது.
மனிதக்கழிவிலுள்ள மோசமான கிருமிகள் Seine நதியில் அதிகம் இருப்பதால், அதில் நீந்தும் வீரர் வீராங்கனைகள் நோய்வாய்ப்படலாம் என்னும் அச்சம் நிலவிவந்தது.
நீந்திய வீராங்கனைகள் சிலரும், தாங்கள் நீந்தும்போது நிறைய நதி நீரைக் குடிக்க நேர்ந்ததாகவும், அதனால், தாங்கள் நோய்வாய்ப்படலாம் என அஞ்சுவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.
அஞ்சியது போலவே நடந்துவிட்டது...
Image: Maja Hitij/Getty Images
ஆக, வீராங்கனைகள் அஞ்சியது போலவே நிகழ்ந்துவிட்டது. ஆம், பெல்ஜியம் அணியைச் சேர்ந்த Claire Michel, நதியில் நீந்தியதால் ஈ.கோலை கிருமித் தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அது குறித்து பெல்ஜியம் ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தங்கள் வீரங்கனைகளில் ஒருவரான Claire Michel நோய்வாய்ப்பட்டுள்ளதால், அவர் சார்ந்த பெல்ஜியம் ட்ரையத்லான் அணியே போட்டியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |