மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம் - சபாநாயகர் பரபரப்பு குற்றச்சாட்டு
மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம் இருந்ததாக சபாநாயகர் தெரிவித்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடியின் மீது தாக்குதல் நடத்த திட்டம்
பட்ஜெட் கூட்ட தொடர் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நேற்று நடைபெற இருந்தது.

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம், சீன ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதால் இரு நாட்களாக அவை முடங்கியது.
இந்த விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் உரை இல்லாமலே தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, நேற்று நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை நாடு பார்த்தது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை நோக்கி எப்படிச் சென்றார்கள் என்பதை அனைவரும் பார்த்தார்கள்.

பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி இருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. தவறாக எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதாலேயே பிரதமரை அவைக்கு வரவேண்டாம் எனக் கூறினேன்” என தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இது குறித்து பேசிய பிரியங்கா காந்தி, "பிரதமர் சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார். நேற்று, 3 பெண்கள் இருக்கைக்கு முன்னால் நின்றதால், அவைக்கு வர அவருக்குத் துணிச்சல் இல்லையா?" என கூறியுள்ளார்.
மாண்புமிகுமக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா அவர்களின் குற்றச்சாட்டு அபத்தமானது. எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
— Jothimani (@jothims) February 5, 2026
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி இருதரப்பினரும் பேசவேண்டும். பிறகு பிரதமர் பதிலளிப்பார். இதுதான்…
"சீனா தாக்குதல்,இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்,எப்ஸ்டீன் பைல் இவை குறித்த பயம் தான் பிரதமரை அவைக்கு வரவிடாமல் தடுத்தது. இதை மறைக்க இப்பொழுது சபாநாயகரின் பின்னால் ஒளிந்துகொண்டு பெண் எம்.பிகள் மீது பழிபோடுவது வெட்கக் கேடானது" என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |