லண்டனில் இளம்பெண் சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 60 வயது பெண் கைது
லண்டனில், இளம்பெண் ஒருவர், கோடீஸ்வரர் ஒருவருடைய மகனால் கொல்லப்பட்ட வழக்கில், தனது 60 வயதுகளிலிருக்கும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நார்வேயைச் சேர்ந்த Martine Vik Magnussen (23) என்ற இளம்பெண் பிரித்தானியாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் படித்துக்கொண்டிருந்தார்.
தேர்வு முடிவுகளைக் கொண்டாடுவதற்காக இரவு விடுதி ஒன்றிற்கு தன் நண்பர்களுடன் சென்றிருந்தார் அவர். 2008ஆம் ஆண்டு, மார்ச் மாதம் அதிகாலை 2.00 மணியளவில், அவர் தன்னுடன் படிக்கும் Farouk Abdulhak என்பவருடன் எங்கோ புறப்படுவதை மற்ற நண்பர்கள் பார்த்திருக்கிறார்கள்.
மறுநாள் அவர் தன் அறைக்குத் திரும்பாததால், அவர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் Magnussenஐத் தேடத்துவங்கியுள்ளார்கள்.
16ஆம் திகதி, 10.30 மணியளவில், Westminsterஇல், Abdulhak வாழ்ந்த வீட்டின் தரைத்தளத்தில் Magnussen இறந்து கிடந்தது தெரியவந்தது. அரை குறை உடையுடன் கொல்லப்பட்டுக் கிடந்த அவரது உடலை மறைப்பதற்காக, அவர் மீது குப்பைக்கூளங்கள் போடப்பட்டிருந்தன.
உடற்கூறு ஆய்வில், Magnussen வன்புணரப்பட்டிருந்ததும், கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டதும் தெரியவந்தது.
பொலிசார் Magnussenஉடன் புறப்பட்ட Abdulhakஐத் தேட, அவரோ அதற்குள் எகிப்துக்குத் தப்பியிருந்தார். அங்கிருந்து அவர் தன் நாடான ஏமனுக்குச் சென்று தலைமறைவாகிவிட்டார்.
Abdulhak ஏமன் நாட்டில் அரசியல் செல்வாக்கும் பணபலமும் மிக்க கோடீஸ்வரர் ஒருவரின் மகன் ஆவார்.
பொலிசார் அவரை சரணடையுமாறு வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், Abdulhakக்கு உதவியதாக தனது 60 வயதுகளிலிருக்கும் பெண் ஒருவர் இன்று Westminsterஇல் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டன் பொலிஸ் நிலையம் ஒன்றில் அவர் காவலில் அடைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக Magnussen வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இன்று இந்த பெண் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் எந்த நாட்டவர், அவருக்கும் Abdulhakக்கும் என்ன உறவு என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.