96 ஓட்டங்களுக்கு நமீபியா ஆல்அவுட்! 8 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிய அணி
நமீபியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஓமான் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அல் அமெரட்டில் நடந்த ஒருநாள் போட்டியில் நமீபியா மற்றும் ஓமான் அணிகள் மோதின.
முதலில் ஆடிய நமீபியா (Namibia) அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லோஃப்டி ஈட்டன் மட்டும் ஓரளவு நின்று ஆட, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர்.
Record Alert! 🚨
— FanCode (@FanCode) February 16, 2025
Oman becomes the first international team to take all 10 wickets with spin in back-to-back ODIs! 🔥🙌#CWCL2onFanCode #NAMvsOMN pic.twitter.com/O7bQaPrIdV
இதனால் நமீபியா 33.1 ஓவர்களுக்கு 96 ஓட்டங்களில் சுருண்டது. ஈட்டன் 30 ஓட்டங்கள் எடுத்தார். ஷகீல் அகமது 4 விக்கெட்டுகளும், ஜெய் ஓடேரா மற்றும் அமீர் கலீம் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய ஓமான் அணியும் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி இலக்கினை நெருங்க விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாக சரிந்தன.
எனினும் 22.4 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் எடுத்து ஓமான் அணி வெற்றி பெற்றது. நமீபியா அணித்தலைவர் கெர்ஹார்ட் எராஸ்மாஸ் 5 விக்கெட்டுகளையும், பெர்னார்ட் ஸ்சோல்ட்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |