டி20 உலகக்கிண்ணம்: முதல் அணியாக வெளியேறிய ஓமன்..மிரட்டல் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து
ஆன்டிகுவாவில் நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது.
ஓமன் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. முதலில் துடுப்பாடிய ஓமன் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் எடுத்தது.
பிரதிக் அதவாலே 40 பந்துகளில் 54 ஓட்டங்கள் விளாசினார். அயான் கான் 41 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணியில் மைக்கேல் ஜோன்ஸ் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜார்ஜ் முன்சே 20 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து வந்த அணித்தலைவர் ரிச்சி பெர்ரிங்க்டன் 13 ஓட்டங்களில் வெளியேற, மறுமுனையில் பிரண்டன் மெக்மல்லன் அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
A quality innings from Scotland all-rounder Brandon McMullen and another @MyIndusIndBank Milestone moment ?#T20WorldCup #OMAvSCO pic.twitter.com/DqW8F2Edia
— ICC (@ICC) June 9, 2024
இதன்மூலம் ஸ்கொட்லாந்து அணி 13.1 ஓவரிலேயே 3 விக்கெட்டுக்கு 153 ஓட்டங்கள் எடுத்து மிரட்டல் வெற்றி பெற்றது. மெக்மல்லன் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் விளாசினார்.
ஸ்கொட்லாந்து அணிக்கு இது 2வது வெற்றியாகும். அதே சமயம் தொடர்ச்சியாக 3வது தோல்வியை சந்தித்த ஓமன் தொடரை விட்டு வெளியேறியது.
It's a win for ??????? in Antigua ?
— ICC (@ICC) June 9, 2024
A stylish batting display from Brendon McMullen and George Munsey help Scotland to their second victory in #T20WorldCup 2024 ?#T20WorldCup | #OMAvSCO | ?: https://t.co/ImfsbdbR33 pic.twitter.com/NJcfBUy5a4
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |