ஊடகவியலாளரை 2வது திருமணம் செய்த காஷ்மீர் முதல்வர்
kashmir cm omar abdullah 2nd marriage with journalist Nidhi Razdan: காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, ஊடகவியலாளரான நிதி ரஜ்தானை 2வது திருமணம் செய்துள்ளார்.
ஊடகவியலாளரை திருமணம் செய்த ஒமர் அப்துல்லா
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக இருப்பவர் 56 வயதான ஒமர் அப்துல்லா.

இவருக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு பாயல்நாத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வந்த இவர்களுக்கு, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
இந்நிலையில், ஒமர் அப்துல்லா ஊடகவியலாளர் நிதி ரஜ்தானை(Nidhi Razdan) 2வது திருமணம் செய்துள்ளார்.

நேற்று ஒரு புதிய பயணம் தொடங்கியது என குறிப்பிட்டு தனது மனைவியுடனான புகைப்படங்களை ஒமர் அப்துல்லா பகிர்ந்துள்ளார்.
A new journey began yesterday 💍@Nidhi https://t.co/BXbdLq2d1H
— Omar Abdullah (@OmarAbdullah) October 31, 2026
யார் இந்த நிதி ரஸ்தான்?
49 வயதான நிதி ரஜ்தானுக்கும் இது 2வது திருமணம் ஆகும். 2005 ஆம் ஆண்டில் ஊடகவியலாளரான நீலேஷ் மிஸ்ராவை திருமணம் செய்த நிதி, 2007 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர்.

1999 முதல் 2020 வரை 21 ஆண்டுகள் NDTV நிறுவனத்தில் பணியாற்றிய நிதி ரஜ்தான், நிர்வாக ஆசிரியராகவும், பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் இருந்தார்.
மேலும், பத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியதற்காக ராம்நாத் கோயங்கா விருது, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில அரசு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
2021 ஆம் ஆண்டில் ரஜ்தான், காந்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் மூலோபாய திட்டங்களின் இயக்குநராகவும், கௌடில்யா பொதுக் கொள்கைப் பள்ளியில் வருகை தரும் ஆசிரிய உறுப்பினராகவும் இருந்தார்.