ஆசியக்கிண்ணம் 2025: ஆப்கானிஸ்தான் சிக்ஸர் மழை! 20 பந்தில் முதல் அரைசதமடித்த வீரர்
ஹாங் காங் அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் 188 ஓட்டங்கள் குவித்துள்ளது.
அடல் அதிரடி அரைசதம்
ஆசியக்கிண்ணம் 2025யின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் விளையாடி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாடியது. அணியின் ஸ்கோர் 26 ஆக உயர குர்பாஸ் (8), இப்ராஹிம் ஜட்ரான் (1) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
முகம்மது நபி 33 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் செதிகியுல்லா அடல் (Sediqullah Atal) அதிரடி அரைசதம் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஓமர்சாய் (Azmatullah Omarzai) வாணவேடிக்கை காட்ட, ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
ஓமர்சாய் 53 ஓட்டங்கள்
கடைசி 5 ஓவர்களில் 78 ஓட்டங்கள் விளாசப்பட, ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்கள் குவித்தது.
முதல் அரைசதம் (20 பந்துகளில்) விளாசிய ஓமர்சாய், 21 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் குவித்தார்.
அடல் ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 73 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
கின்சித் ஷா, ஆயுஷ் ஷுக்லா தலா 2 விக்கெட்டுகளும், அடீக் இக்பால் மற்றும் எஸன் கான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |