15 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும்., மின்சார ஆட்டோவை அறிமுகப்படுத்தும் Omega Seiki
Omega Seiki நிறுவனம் கால் மணிநேரத்தில் சார்ஜ் செய்யும் 3-சக்கர எலக்ட்ரிக் வாகனத்தை (EV) வெளியிட்டது.
எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான Omega Seiki Mobility (OSM) வெள்ளிக்கிழமை இந்திய சந்தையில் OSM Stream City Qik என்ற புதிய பயணிகள் மின்சார மூன்று சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது.
வெறும் 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும் என்பது இதன் சிறப்பு.
இது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் உதய் நரங் (Uday Narang) கூறுகிறார்.
இந்த பயணிகள் மூன்று சக்கர வாகனத்தின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.3,24,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாங்குபவர்களுக்கு 2 லட்சம் கிலோமீட்டர் அல்லது 5 வருட உத்தரவாதம் கிடைக்கும். இதில் 8.8 கிலோவாட் பேட்டரி உள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டு Delhi-NCR மற்றும் Bengaluru-வில் 100 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.
அதன் பிறகு, இது ஹைதராபாத், சென்னை, அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் அமைக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |