டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஒமிக்ரான் ஏற்படுத்தும்! ஆய்வில் வெளிவந்த தகவல்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் முன்பு உருமாறிய வைரஸ்களை விட மிகவும் வீரியத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் சில நோய் எதிர்ப்பு சக்திகளை தகர்க்க கூடியது என்றும் இந்த வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்நிலையில் டெல்டா வைரஸை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஒமிக்ரான் வைரஸ் ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வில் தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளின் ஆரம்ப கட்ட ஆய்வில் டெல்டா அல்லது பீட்டா வைரசுகளுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் நோய் தொற்று ஏற்படுத்தும் வாய்ப்பு 3 மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்க நாட்டின் சுகாதாரத்துறை ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக சேகரித்த தரவுகள் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா விஞ்ஞானி ஜூலியட் புல்லியம் கூறும்போது, “தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை ஒமிக்ரான் எந்த அளவுக்கு தவிர்க்கிறது என்பதை இன்னும் மதிப்பிட முடியவில்லை” கூறியுள்ளார்
மற்றொரு விஞ்ஞானியான அன்னேவான் கோட் பெர்க் கூறும்போது, நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். தடுப்பூசிகள் இன்னும் கடுமையான நோய்களில் இருந்து பாதுகாக்கும் என்று நம்புகிறோம். தடுப்பூசிகள் எப்போதுமே தீவிர நோய், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு எதிராக தீவிரமாகவே போராடுகிறது என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022