Omicron பேரழிவை ஏற்படுத்தும்! பிரித்தானியாவின் உயர்மட்ட விஞ்ஞானி எச்சரிக்கை
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு ‘லேசான’ சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதாகத் தோன்றுகிறது, ஆனால் அதிக அளவு பரவுதல் இன்னும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று பிரித்தானியாவின் உயர்மட்ட விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.
Zoe கொரோனா ஆய்வு புள்ளிவிவரங்களின்படி, ஐந்து நாட்களுக்கு முன்பு வரையிலான சோதனை தரவுகளின் அடிப்படையில், பிரித்தானியாவில் தற்போது சராசரியாக 83,658 புதிய தினசரி தொற்றுகள் பதிவாகியுள்ளன.
கடந்த வாரம் பதிவான 80,483 புதிய தினசரி தொற்றுகளிலிருந்து 4% அதிகரித்திருக்கிறது. இவற்றில் சுமார் 3% ஒமைக்ரான் ஆக இருக்கலாம் என்று பிரித்தானியா அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் மரபணு தொற்றுநோயியல் பேராசிரியரும், Zoe ஆய்வின் முன்னணி விஞ்ஞானியுமான Tim Spector கூறியதாவது, Omicron டெல்டாவை விட அதிகமாக பரவக்கூடியதாகத் தோன்றினாலும், Zoe பயனர்களின் புதிய அறிக்கைகள் உட்பட ஆரம்ப அறிகுறிகள், அது தடுப்பூசி போட்டவர்கள் மத்தியில் பரவி வருவதைக் காட்டுகின்றன.

ஆனால், Omicron லேசான சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது, அதனால் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.
கொரோனா கணிக்க முடியாதது, பெரும்பாலானவர்களுக்கு சளி பிடித்தது போல் உணர்ந்தாலும் கூட, ஜலதோஷத்தை விட நீண்ட கால பாதிப்புகள் அதிகம் என Tim Spector எச்சரித்துள்ளார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        