புதிய Omicron மாறுபாட்டின் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
Omicron மாறுபாடு தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்த வைரஸ் பரவல் மிக அதிவேகமாக மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது.
இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகளையும் இந்த வைரஸ் தாக்கம் பதிவாகியுள்ளது. இதைத் தவிர பெல்ஜியம், போட்ஸ்வானா, ஹாங்காங், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் போன்ற 57 நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களை எளிதில் பாதிக்கலாம் என்று பரிந்துரைக்கிறது.
இருப்பினும், டெல்டா மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது இந்த நோய் லேசானதாக இருக்கும் என்றும் உலகளாவிய சுகாதார நிறுவனம் கூறுகிறது.
Omicron மாறுபாட்டின் சில அறிகுறிகளை நிபுணர்கள் பரிந்துரைத்து உள்ளனர். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
அறிகுறிகள்
- முந்தைய மாறுபாடுகளைப் போலவே, கோவிட் Omicron சோர்வு அல்லது தீவிர சோர்வுக்கு வழிவகுக்கும். ஒரு நபர் அதிக சோர்வாக உணரலாம், குறைந்த ஆற்றலை அனுபவிக்கலாம்.
- Omicron பாதிக்கப்பட்ட நபர்கள் தொண்டை புண்ணுக்கு பதிலாக தொண்டையில் அரிப்பு ஏற்படுவதாக கூறப்படுகின்றது. இது முந்தையதை விட மிகவும் வேதனையாக இருக்கும்.
- தற்போதைய மாறுபாடு மிதமான உடல் வெப்பநிலையைத் தூண்டுகிறது, அது தானாகவே சரியாகி விடுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்.
- புதிய Omicron மாறுபாடு இரவில் வியர்வையை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- Omicron நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வறட்டு இருமலாலும் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மாறியுள்ள அறிகுறிகள் என்ன?
முந்தைய வகைகளின் அறிகுறிகளுக்கு மாறாக, Omicron மாறுபாடு வாசனை மற்றும்/அல்லது சுவையை இழப்பதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை என்று நம்பப்படுகிறது, மேலும் மூக்கில் அடைப்பு போன்ற அறிகுறிகள் எதுவும் இல்லை.