ஒமைக்ரான் மாறுபாடு ஏற்கனவே பிரான்ஸில் பரவி இருக்கலாம்: சுகாதார அமைச்சர்
ஒமைக்ரான் மாறுபாடு ஏற்கனவே பிரான்ஸில் பரவி இருக்கலாம் என நாட்டின் சுகாதார அமைச்சர் Olivier Veran தெரிவித்துள்ளார்.
பாரிஸில் உள்ள தடுப்பூசி மையத்தில் நிருபர்களிடம் Olivier Veran கூறுகையில், பிரான்சில் இன்னும் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதாக அடையாளம் காணப்படலில்லை, ஆனால் அது சில மணிநேரங்கள் அடையாளம் காணப்படலாம்.
பிரித்தானியாவில், இத்தாலியில், பெல்ஜியத்தில் இந்த மாறுபாடு பரவியுள்ளதால், இங்கு ஏற்கனவே பரவியிருக்க வாய்ப்பு உள்ளது.
நாங்கள் அவற்றை அடையாளம் கண்டு, அதன் பரவலை முடிந்தவரை குறைப்போம் என Olivier Veran தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் முந்தைய மாறுபாடுகளைக் காட்டிலும் மிகவும் வேகமாக பரவும் திறம் கொண்டதாக இருக்கிறது, இருப்பினும் இது மற்ற மாறுபாடுகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கடுமையான பாதிப்பை ஏற்படுத்துமா என்பது நிபுணர்களுக்கு இன்னும் தெரியவில்லை.