கனடா முதலான நாடுகளில் பரவிவரும் புதிய Omicron துணை வைரஸ்: சில தகவல்கள்
BA.2 sub-lineage of Omicron என்று அழைக்கப்படும் இந்த Omicron துணை வைரஸ், கடந்த ஆண்டு நவம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வைரஸ் குறித்த சில தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
தொற்றும் திறன்
இந்த Omicron துணை மாறுபாடு வைரஸ், Omicron வைரஸை விட வேகமாக வளர்வதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சியாகிய UKHSA தெரிவித்துள்ளது.
அது Omicron வைரஸைவிட, அதிக தொற்றும் தன்மையுடையதாக இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
என்றாலும், அது Omicron வைரஸைவிட எவ்வளவு அதிக தொற்றும் திறன் கொண்டது என்பதை அறிய கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளாரகள்.
‘Stealth’ Omicron
இந்த துணை Omicron வைரஸ், பிசிஆர் சோதனையில் அதைக் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளதால், இரகசியமாக செயல்படும் வைரஸ் என்று பொருள்படும் வகையில், ‘Stealth’ Omicron என்றும் அழைக்கப்படுகிறது.
இதனால், ஒருவருக்கு இந்த கொரோனா தொற்று இருந்தும், பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு கிடைக்க வாய்ப்புள்ளது.
நோயின் தீவிரத்தன்மையும்மருத்துவமனை அனுமதியும்
தொடர்ந்து இந்த BA.2 Omicron துணை மாறுபாடு வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அது Omicron வைரஸை விட தீவிர நோய்த்தொற்றை உருவாக்குவதாகத் தோன்றவில்லை.
அத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையிலும் வித்தியாசம் இல்லை என டென்மார்க் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.