உங்களுக்கு Omicron தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியவேண்டுமா? இப்போதைக்கு இந்த இரண்டும்தான் முக்கிய அறிகுறிகளாம்...

Covid Virus United Kingdom Omicron
By Balamanuvelan Jan 18, 2022 07:49 AM GMT
Report

தற்போது, கோவிட் அறிகுறிகள் இல்லாதாவர்களுக்கே கொரோனா பரிசோதனையில் Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

ஆனாலும், ஒருவருக்கு Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைக் காட்ட சில முக்கிய அறிகுறிகள் இருக்கத்தான் செய்கின்றன.

Omicron வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸைப் பொருத்தவரை, குறிப்பாக கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் அவ்வகை கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நிலையில், அவர்களுக்கு வெறும் ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் மட்டுமே காணப்படும்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், நீங்கள் எளிதில் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உடைய உங்கள் உறவினர் ஒருவரை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம், அப்போது நீங்கள் உங்களுக்கு Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

ஆக, என்னென்ன அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று இருக்க வாய்ப்புள்ளது என யூகிக்கலாம்.

உங்களுக்கு Omicron தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியவேண்டுமா? இப்போதைக்கு இந்த இரண்டும்தான் முக்கிய அறிகுறிகளாம்... | Omicron Symptoms Clue Infected Variant

தற்போதைக்கு, ஒருவருக்கு இரண்டு முக்கிய அறிகுறிகள் இருந்தால், Omicron வகை கொரோனா வைரஸ் இருக்க வாய்ப்புள்ளது என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

அவை என்னவென்றால், மூக்கில் நீர் வடிதலும், தலைவலியுமாம்...

University College London தொற்றுநோயியல் துறை பேராசிரியரான Irene Petersen என்பவர் கூறும்போது, மூக்கில் நீர் வடிதலும் தலைவலியும் பல நோய்களின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்புள்ளது உண்மைதான். ஆனால், அவையே கோவிட் தொற்றின் முதல் மற்றும் ஒரே அறிகுறிகளாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார்.

ஆகவே, உங்களுக்கு மூக்கில் நீர் வடிதலும், தலை வலியும் இருந்தால், சில நாட்களுக்கு lateral flow tests வகை கொரோனா பரிசோதனைகள் செய்துகொள்ளுங்கள் என்கிறார் அவர்.

Omicronஐப் பொருத்தவரை, அவ்வகை தொற்றுக்கு சுமார் 20 அறிகுறிகள் வரை உள்ளன. அவற்றில், முதல் ஐந்து இடத்தைப் பிடித்துள்ளவை, மூக்கில் நீர் வடிதல், தலை வலி, சோர்வு, தும்மல் மற்றும் தொண்டை அழற்சி (sore throat) ஆகியவையாகும்.

ஆனால், அவை போக, கரகரப்பான குரல், குளிரில் உடல் நடுங்குதல் (chills or shivers), ஒரு விடயத்தில் கவனம் செலுத்த இயலாமல் மனம் தடுமாறுதல் (brain fog), தலை சுற்றுவது போன்ற உணர்வு, உணவைத் தவிர்த்தல் மற்றும் கவலை அல்லது மன அழுத்தம் இருப்பது போல உணர்தல் ஆகியவையும், Omicron வகை கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளில் முதல் 20 இடத்தில் இருப்பவையாகும்.

Omicron வகை கொரோனா தொற்றுடைய ஒருவருடன் தொடர்பிலிருந்த ஒருவருக்கு இந்த அறிகுறிகள் உருவாகும் நிலையில், அவருக்கு இரண்டு முதல் ஐந்து நாட்களுக்குள் Omicron வகை கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.  

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US