ஒமைக்ரான் வைரஸ், சளி பிரச்சனை! இரண்டிற்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி?
உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது ஒமைக்ரான வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், மக்கள் பலரும் சளி பிரச்சனை இருந்தால் கூட, இது ஒமைக்ரானாகா இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளதால், அது தொடர்பான முழு விபரம் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான வைரஸ் தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் பரவ துவங்கியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதன் பாதிப்பு தீவிரமாக உள்ளது.
இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸின் அறிகுறிகளும், சளிப் பிரச்சனை இருந்தால் அதன் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதால், பலருக்கும் இதில் சந்தேகம் உள்ளது.
இது குறித்து பிரபல ஆங்கில் ஊடகம் இரண்டிற்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது தொடர்பான முழு விபரத்தை வெளியிட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் அறிகுறிகள் என்ன?
ஆய்வாளர்கள் தற்போது வரை மேற்கொண்டுள்ள சோதனையின் படி, ஒமைக்ரான வைரஸ் மாறுபாடு இதற்கு முன்பு இருந்த கொரோனா வைரஸ்களின் அறிகுறிகளில் இருந்து மிகவும் வித்தியாசமானவையாக உள்ளது.
ஒமைக்ரான் தொற்றின் ஆரம்பத்தை உணர்த்தும் 5 முக்கிய அறிகுறிகள்
- தொண்டையில் வலிக்கு பதிலாக ஒரு கீறல் போன்ற உணர்வு
- உலர் இருமல் மிகுந்த சோர்வு
- லேசான தசை வலிகள்
- இரவு நேரங்களில் வியர்ப்பது
பொதுவாக கொரோனாவிற்கு முக்கிய மூன்று அறிகுறிகள்
- உடலில் அதிக வெப்பநிலை
- புதிதாக தொடர்ச்சியான இருமல்
- வாசனையோ அல்லது சுவை இழப்பு போன்றவை ஆகும்.
ஜலதோஷத்தின்(சளி) அறிகுறிகள்
- மூக்கு ஒழுகுதல்
- தொண்டை புண்
- தலைவலி
- தசை வலிகள்
- இருமல்
- உயர்ந்த வெப்பநிலை
- காதுகள் மற்றும் முகத்தில் வலிப்பது போன்ற ஒரு அழுத்தம்
- சுவை மற்றும் வாசனை இழப்பு
பொதுவாக ஜலதோஷம் மற்றும் கொரோனா இரண்டிற்கும் பொதுவான ஒன்றாக இருப்பது குளிர்ச்சி தான், இதில் தலைவலி, தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், தும்மல், வாசனை அல்லது சுவை இழப்பு போன்றவை ஒன்றாக இருந்தாலும், மூச்சுத் திணறல் மற்றும் தொடர் இருமல் இருந்தால் சோதனை செய்து கொள்வது நல்லது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.