Cryptocurrency சந்தையை மொத்தமாக சிவப்பாக்கிய அந்த ஒற்றை செய்தி
உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் சொத்தாக கருதப்படும் பிட்காயின் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதற்கு முதன்மை காரணமாக புதிய கொரோனா மாறுபாடு தான் என கூறப்படுகிறது.
பிட்காயின் வரலாற்றில் அதன் உச்ச உயர்வான $69,000 இலிருந்து 20% அளவுக்கு தற்போது சரிவை எதிர்கொண்டுள்ளது. தற்போது ஒரு பிட்காயினின் விலை $54,000க்கு கீழே சரிந்துள்ளது,
இது தினசரி கிட்டத்தட்ட 8% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும் $54,321 என்ற சரிவானது கடந்த அக்டோபர் தொடக்கத்தில் இருந்து அதன் குறைந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
பிட்காயின் சரிவடைந்துள்ளதால் எஞ்சிய கிரிப்டோகரன்சிகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன. Ethereum மொத்தத்தில் 10% சரிவை சந்தித்து 4,059 டொலர் மதிப்புக்கு வந்துள்ளது.
9.9% சரிவை சந்தித்துள்ள XPR தற்போது 95 centsகு கீழே பதிவாகியுள்ளது. மட்டுமின்றி dogecoin சுமார் 8.3% கீழே சரிவை சந்தித்த வேளையில் shiba inu மேலும் 5% சரிவடைந்துள்ளது.
cryptocurrency சந்தையை மொத்தமாக சிவப்பாக்கியதற்கு புதிய கொரோனா மாறுபாடு காரணம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மாறுபாடு பற்றிய பெருகிவரும் அச்சம் காரணமாக உடனடியாக உலகம் முழுவதும் கடுமையான பயணத் தடைகளை ஏற்படுத்தக் கூடும் என தெரியவந்துள்ளது.
தென்னாபிரிக்கா மற்றும் பல அண்டை நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் பல ஐரோப்பிய நாடுகளால் தடைசெய்யப்பட்டுள்ளன.