ஒமிக்ரான் வீரியம் குறித்து பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டறிந்த முக்கிய தகவல்!
ஒமிக்ரான் வீரியத்தின் தன்மை குறித்து பிரித்தானியா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாவும், அத்தகவலை இன்று அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, பெரும்பாலான பிரித்தானியர்களுக்கு டெல்டா மாறுபாட்டை விட ஒமிக்ரான் மாறுபாடு லேசான பாதிப்பை ஏற்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்களாம்.
Politico வெளியிட்டுள்ள தகவலில், பிரித்தானியா சுகாதார பாதுகாப்பு நிறுவனம், ஒமிக்ரான வீரியத்தின் தன்மை குறித்து அதிகாரப்பூர்வமான தரவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளனார்.
அதில், தீவிரம் குறைந்த அறிகுறிகளுடன் கூடிய லேசான பாதிப்பால் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Politico கூறியதாவது, ஒமிக்ரான் லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
ஓமிக்ரானின் பரவும் தன்மை மிக அதிகமாக இருப்பதால், அது லேசானதாக இருந்தாலும், நோய்த்தொற்றுகள் அதிகரித்து, அதிக எண்ணிக்கையிலானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
அதேசமயம், கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் இறப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதற்கான ஆதாரங்களை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.