ஒமிக்ரான் கொரோனாவை என்டெமிக்காக மாற்றக்கூடும்! நிபுணர் கருத்து
ஒமிக்ரான் மாறுபாடு கொரோனாவை என்டெமிக்காக மாற்றக்கூடும் என Spi-M உறுப்பினர் டாக்டர் Mike Tildesley தெரிவித்துள்ளார்.
என்டெமிக் நிலை என்றால் குறிப்பிட்ட மக்கள் குழுவானது வைரஸூடனேயே வாழ பழகிக்கொள்ளும் நிலையாகும்.
டாக்டர் Mike Tildesley கூறியதாவது, கொரோனாவின் வீரியம் தொடர்ந்து குறையும் என்பதற்கான முதல் அறிகுறி ஒமிக்ரான் ஆகும்.
எதிர்காலத்தில் உருவாகும் புதிய மாறுபாடு லேசான பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் மற்றும் கொரோனா என்டெமிக்காக மாறும்.
அதேசமயம், லேசான பாதிப்பு கொண்ட மாறுபாடு நீண்ட காலத்திற்கு இருக்கும்.
இது வழக்கமான ஜலதோஷத்தை போல் இருக்கும். இன்னும் நாம் இந்த நிலையை அடையவில்லை, ஆனால், ஒமிக்ரான தான் அதற்கான முதல் அறிகுறி என டாக்டர் Mike Tildesley தெரிவித்துள்ளார்.