ஸ்காட்லாந்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவல்! ‘எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என சுகாதார செயலாளர் வலியுறுத்தல்
ஸ்காட்லாந்தில் 6 பேருக்கு ஒமைக்ரான் மாறுபாடு தொற்று பாதிப்பு இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
நான்கு தொற்றுகள் Lanarkshireபகுதியில் மற்றும் இரண்டு Greater Glasgow மற்றும் Clyde பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஸ்காட்லாந்து சுகாதார செயலாளர் Humza Yousaf கூறுகையில், புதிய மாறுபாடு இருப்பதாக இப்போது அடையாளம் காணப்பட்ட ஆறு பேருக்கு இது ஒரு கவலையான நேரமாக இருக்கும்.
பாதிக்கப்பட்ட அனைவரும் நிபுணர்களின் உதவி மற்றும் ஆசோலனையை பெறுவார்கள் மற்றும் பொது சுகாதார ஸ்காட்லாந்து மேம்பட்ட தொடர்புத் தடமறிதலை மேற்கொள்ளும்.
தொடர்புத் தடமறித்ல் மூலம் வைரஸின் தோற்றம் மற்றும் சமீபத்திய வாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொண்ட நபர்களையும் அடையாளம் காண உதவும்.
ஒமைக்ரான் மாறுபாடு பற்றி இன்னும் நிறைய அறிந்துக்கொள்ள வேண்டும்.
அதன் தீவிரம், பரவுதல் மற்றும் சிகிச்சைகள் அல்லது தடுப்பூசிகளுக்கான செயல்திறன் பற்றிய கேள்விகள் உள்ளன, மேலும் கூடுதல் தகவல்களை வழங்க விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், ஒமைக்ரான் குறித்து அறியப்படும் வரை நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என Humza Yousaf கூறியுள்ளார்.