கனடாவில் Omicron அலை உச்சகட்டத்தை எட்டயிருக்கலாம்! உயர்மட்ட சுகாதார அதிகாரி எச்சரிக்கை
வேகமாகப் பரவும் Omicron வகை கொரோனா வைரஸ் நாட்டில் உச்சத்தை எட்டியிருக்கலாம் என்று கனடாவின் உயர்மட்ட சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் Theresa Tam வெளியிட்ட அறிக்கையில், முன்னதாகவே தேசிய அளவில் 'தினசரி தொற்று எண்ணிக்கை, சோதனை நேர்மறை, Rt (வைரஸ் இனப்பெருக்க எண்) மற்றும் கழிவு நீர் பிரச்சினை' என Omicron-ன் தீவிரம் தொடர்பான ஆரம்ப அறிகுறிகள் கிடைத்தன.
ஆனால் நாடு தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான கோவிட் நோய்த்தொற்றுகளைக் கண்டறிந்தது.
அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சுமார் 24,000 தொற்றுகள் கண்டறியப்பட்டன. டாமின் கூற்றுப்படி, இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது சராசரி தொற்று எண்ணிக்கை 28 சதவீதம் குறைந்துள்ளது, ஆனால் 22 சதவீத நேர்மறையான சோதனை விகிதமே நாடு முழுவதும் இன்னும் “பரவலான” நோய் செயல்பாடு இருப்பதைக் குறிக்க போதுமானது என்று அவர் எச்சரித்தார்.
அப்படியானால், கனடாவில் இன்னும் இன்னும் சில கடினமான வாரங்கள் உள்ளன மற்றும் அடுத்தடுத்து பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று டாம் கூறினார்.
கனடாவில் உள்ள பல மருத்துவமனைகள், நோயாளிகளின் சேர்க்கை அதிகரித்து வருவதால் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.
இதற்கிடையில், ஒன்டாரியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல கனேடிய மாகாணங்கள் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ளன.
இருப்பினும், இன்னும் சில கடினமான வாரங்கள் இருக்கக்கூடும், மேலும் தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் இருக்கலாம் என்று டாம் கூறினார்.
கனடாவில் கடந்த ஏழு நாட்களில் சராசரியாக 10,000-க்கும் அதிகமானோர் ஒவ்வொரு நாளும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.