சிவப்பு கம்பளம் மீது நடந்த மன்னர் சார்லஸ், கமிலா..பக்கிங்ஹாம் அரண்மனையை கடுமையாக விமர்சித்த மேகனின் எழுத்தாளர்
கென்யாவில் மன்னர் சார்லஸ், ராணி கமிலாவுக்காக மண்ணின் மீது சிவப்பு கம்பளம் போடப்பட்டது குறித்து மேகன் மார்க்கலின் பயோகிராஃபர் ஓமிட் ஸ்கோபி விமர்சித்துள்ளார்.
மன்னரின் கென்யா பயணம்
பிரித்தானிய மன்னர் சார்லஸும், ராணி கமிலாவும் ஆப்பிரிக்க கென்யாவுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நைரோபியில் உள்ள தேசிய பூங்காவுக்கு அரச தம்பதியினர் பயணித்தனர். மன்னரை மரியாதையுடன் வரவேற்கும் என மண்ணிலேயே சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது.
Twitter
வாகனத்தில் இருந்து இறங்கிய அரச தம்பதி அதன் மீது நடந்தனர். இதுதொடர்பான புகைப்படத்தை எழுத்தாளர் ஓமிட் ஸ்கோபி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
எழுத்தாளரின் விமர்சனம்
அவரது பதிவில், 'நைரோபி தேசிய பூங்காவில் மண்ணைத் தவிர்ப்பதற்காக அரசரும், அரசியும் சிவப்பு கம்பளத்தின் மீது நடந்து செல்வது மிகவும் அபத்தமானது மற்றும் தொடர்பில்லாதது. இதுகுறித்து அறிந்த அரண்மனை உதவியாளர், ஒருவேளை ஏற்பாட்டாளர்களின் தேர்வாக இருந்தாலும் கூட அதை அகற்றும்படி எளிதாக கூறியிருக்கலாம்' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் அவரது மற்றொரு பதிவில், 'நான் உலகெங்கிலும் பல அரச வருகைகளில் இருந்தேன், அரச விழாக்களுக்கு வருவதற்கு முன்பு (தேவையற்றதாக கருதப்படும் சிவப்பு கம்பளங்கள் உட்பட) கடைசி நிமிட மாற்றங்கள் அல்லது மாற்றங்களைக் கோரி உதவியாளர்கள் ஓடுவதைப் பார்த்தேன், எனவே இதற்கு முன்னோடி உள்ளது' என்றார்.
ஓமிட்டின் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக ITV ஊடகத்தின் அரச ஆசிரியர் கிறிஸ் ஷிப் தனது பதிவில், 'கென்யர்கள் சிவப்பு கம்பளங்கள் மீது மிகவும் ஆர்வமாக இருந்தனர். வேறு எந்த அரச சுற்றுப்பயணத்தையும் விட அவர்களில் அதிகமானவர்களை நான் இங்கு பார்த்தேன். ஆனால் ஒப்புக்கொள்கிறேன், இது வித்தியாசமாக தெரிகிறது' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |