முட்டை, ஆம்லெட் பிரியரா? அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
முட்டை! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுப்பொருள்.
உடலுக்கு தேவையான விட்டமின் பி2, விட்டமின் பி12, விட்டமின் டி, செலீனியம், ஐயோடின், ஃபோலேட் மற்றும் புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அடங்கிய முட்டைகள் நம் உடலுக்கு ஆரோக்கியமானது தான்.
சிலரால் தினமும் முட்டை, ஆம்லேட் இல்லாமல் உணவு சாப்பிடவே முடியாது.
இப்படி தினசரி முட்டை சாப்பிடுவது நல்லதா, கெட்டதா, உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும்?
காலை உணவில் முட்டை எடுத்துக் கொண்டால், அன்றைய நாளில் உங்கள் உடலுக்கு தேவையான எனர்ஜி முழுமையாக கிடைக்கும். குறிப்பாக, நீண்ட நேரம் பணி செய்பவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும்.
மூளை செயல்பாட்டுக்கு அத்தியாவசியமாக உள்ள கோலின் என்ற சத்து முட்டையில் உள்ளது. இது மட்டுமல்லாமல் முட்டையில் 100 முதல் 500 மில்லி கிராம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது.
முட்டையில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்பது இதய நோய் அபாயங்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் உள்ளுறுப்புகள் வீக்கம் ஏற்படுவதை தடுக்க உதவும்.
முட்டையின் மஞ்சள் கருவில், உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும் எல்டிஎல் கொழுப்பு இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் இது உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்பு ஆகும். உடலுக்கு நன்மை பயக்கு ஹெச்டிஎல் கொழுப்பு முட்டையில் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதய நோய் பாதிப்புகள் அல்லது நீரிழிவு போன்ற பிரச்சினைகள் இல்லாவிட்டால் தினசரி முட்டை சாப்பிடலாம். அதே சமயம், அவரவர் உடல் தேவையைப் பொருத்து ஒன்று அல்லது இரண்டு முட்டைக்கு மேல் சாப்பிடாமல் இருப்பது நலம் பெயர்க்கும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.