தினமும் ஆம்லெட் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
முட்டை பலருக்கும் பிடித்தமான உணவு பொருளாக உள்ளது, தினமும் ஆம்லெட், ஆப்பாயிலை உணவில் சேர்த்து கொள்வதை பலரும் விரும்புவார்கள்.
முட்டையில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான அத்தியாவசியமான சத்துகள் இருந்தாலும், முட்டையையும் அளவாகச் சேர்த்துக்கொள்வதே சிறந்தது. அதை ஒரு ஆய்வு முடிவும் எடுத்து கட்டுகிறது.
அமெரிக்காவில் உள்ள `நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு அபாயகரமான அளவு கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வின்படி, தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கிறது அந்த ஆய்வு முடிவு. அதாவது, தினமும் ஒரு முட்டைவீதம் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 18 சதவிகிதமும், பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் 17 சதவிகிதமும் இருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல், தினமும் இரண்டு முட்டை சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் 34 சதவிகிதமும், இதயநோய் வருவதற்கான வாய்ப்பு 27 சதவிகிதமும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
மஞ்சள் கருவைத் தவிர்த்து முட்டையை உட்கொள்வது கொழுப்பின் அளவை அதிகரிக்காமல் இருக்க உதவும். எனவே, முட்டையின் வெள்ளைக்கருவை உட்கொள்வதில் வரம்பு இல்லை. ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க, முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது என்பது மருத்துவர்கள் பலரின் கருத்தாக உள்ளது.