லண்டன் விமானத்தில் தாக்குதலுக்கு இலக்கான நிறைமாத கர்ப்பிணி... பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் சக பயணி ஒருவரால் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில், மன்னிப்புக் கோரிய நிர்வாகம் ஒரு ஷாம்பெயின் போத்தலை வழங்கி வழக்கை முடிக்கப் பார்த்துள்ளது.
நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல்
ஆம்ஸ்டர்டாமில் இருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணப்பட்டுள்ளார் 11 வார கர்ப்பிணியான 35 வயது Parul Patel. சம்பவத்தின் போது விமானத்தில் இருந்து வெளியேற காத்திருக்கும் நிலையில், சக பயணி ஒருவர் நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் முட்டித்தள்ளியதாக கூறப்படுகிறது.
உண்மையில், தவறுதலாக நடந்த சம்பவம் என்றே முதலில் பருல் படேல் எண்ணியுள்ளார். ஆனால் அந்த நபர் வன்மத்துடன், இழிவான உன் முகத்தில் நான் குத்த மாட்டேன் என்று நினைக்காதே என மிரட்டியுள்ளான்.
இதில் மிரண்டுபோன பருல், உடனடியாக நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு விமான நிலைய ஊழியர்களை நாடியுள்ளார். ஆனால் அதிர்ச்சி திருப்பமாக அவர்கள் மன்னிப்புக் கோரியதுடன் ஒரு போத்தல் ஷாம்பெயின் வழங்கி விட்டு, நடந்ததை பெரிதுபடுத்த வேண்டாம் என கூறியுள்ளனர்.
வாட்ஃபோர்ட் பகுதியில் வசித்துவரும் பருல் படேல் வணிக ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். உண்மையில் அந்த நபர் தம்மை காயப்படுத்துவார் என்றே அஞ்சியதாகவும், அந்த சம்பவத்தை அடுத்து தற்போது யாரையும் எதையும் எதிர்கொள்ள பயமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார் பருல்.
பருல் மற்றும் அவரது கணவர் Dhiren Raghvani ஆகியோர் ஆம்ஸ்டர்டாம் சென்று நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு ஆகஸ்டு 19ம் திகதி லண்டன் திரும்பிய நிலையிலேயே, விமானத்தில் வைத்து இச்சம்பவம் நடந்துள்ளது.
தகவல்கள் போதுமானதாக இல்லை
உண்மையில் மிக நெகிழ்ச்சியான ஒரு பயணத்தின் இறுதியில், மோசமான சம்பவம் நடந்துள்ளது மறக்க முடியாத அனுபவமாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார் பருல்.
அந்த நபர் விமானத்தில் இருந்து வெளியேறுவதை தாம் முடக்குவதாகவே அவர் குற்றஞ்சாட்டியதாகவும், மிக மோசமான வார்த்தைகளால் திட்டியதுடன், மிரட்டலும் விடுத்துள்ளதாக பருல் தெரிவித்துள்ளார்.
நடந்த சம்பவத்தை கவனித்த விமான ஊழியர் ஒருவர் பருலை தேற்ற முன்வந்துள்ளார். மட்டுமின்றி, அதிகாரிகள் நடந்தவற்றை விரிவாக விசாரித்துள்ளனர். ஆனால் போதிய சாட்சியங்கள் மற்றும் திரட்டப்பட்ட தகவல்கள் போதுமானதாக இல்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் சம்பவத்தில் தொடர்புடைய நபரும் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இதனால் மேலதிகமாக இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |