டோனி தலைமையிலான இந்திய அணியை விரட்டி கோப்பையை தட்டி தூக்கிய ஜெயவர்தனேவின் இலங்கை அணி! இந்த நாளை மறக்க முடியுமா?
கடந்த 2008ல் இதே 6ஆம் திகதி ஜூலையை கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.
ஏனெனில் இலங்கை கிரிக்கெட் அணியானது இந்தியாவை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது அந்த நாளில் தான். 2008 ஜூன் 6 பாகிஸ்தான், கராச்சியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மஹேல ஜெயவர்தன தலைமையிலான இலங்கை மற்றும் மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணிகள் மோதின.
போட்டியில் நாண சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கைக்கு வழங்கியது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 49.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்றது.
#OnThisDay in 2008, Sri Lanka won its fourth Asia Cup title, after beating India in the final by 100 runs. ?#SLvIND pic.twitter.com/99QHOs1QUv
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 6, 2021
அணி சார்பில் அதிகபடியாக சனத் ஜயசூரியா 114 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 125 ஓட்டங்களை எடுக்க திலகரத்ன டில்ஷான் 56 ஓட்டங்களை பெற்றார். 274 என்ற ஓட்ட இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அஜந்த மெண்டீஸின் சுழலில் சிக்கி சின்னா பின்னமாகிப் போனது.
அதன்படி அவர்கள் 39.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 100 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவினர்.
இந்திய அணி சார்பில் வீரேந்தர் சேவாக் 36 பந்துகளில் 12 பவுண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்களையும், டோனி 49 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை சார்பில் அஜந்த மெண்டீஸ் 8 ஓவர்களுக்குப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 13 ஓட்டங்களை வழங்கி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக அஜந்த மெண்டீஸ் தேர்வானது குறிப்பிடத்தக்கது.
13 years ago (06th July 2008) - Sri Lanka beat India to win the ODI Asia Cup in Pakistan. Master Blaster Sanath Jayasuriya scored a magnificent 125 and Ajantha Mendis bamboozled Indian batsmen with 8-1-13-6. Sri Lanka won the Asia Cup in 1986, 1997, 2004, 2008 & 2014. #Cricket ??
— Daniel Alexander (@daniel86cricket) July 6, 2021