முன்பு ஏழை விவசாயி... இன்று முகேஷ் அம்பானிக்கு பக்கத்தில் பல கோடி மதிப்பிலான வீட்டில் வாழும் தமிழர்
முதலமைச்சர் என் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப் பிரதேச அரசு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக பல்துறை பணிக்குழு ஒன்றை நிறுவுகிறது.
உழைப்பு மற்றும் விடாமுயற்சி
அதன் முக்கிய பொறுப்பில் டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன் என்பவரை நியமிப்பதாக அறிவித்துள்ளது. வணிக வட்டத்தில் அன்புடன் சந்திரா என அழைக்கப்படும் என் சந்திரசேகரன் மிக எளிமையான நிலையில் இருந்து கடும் உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் சிகரங்கள் தொட்டவர்.
1963ல் தமிழ்நாட்டின் மோகனூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை அரசுப் பள்ளியில் பயின்றவர், பின்னர் கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் அப்ளைடு சயின்ஸில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
திருச்சியில் உள்ள Regional பொறியியல் கல்லூரியில் MCA பட்டம் பெற்றார். 1987ல் TCS நிறுவனத்தில் பயிற்சியாளராக இணைந்தவர், தமது கடும் உழைப்பால் பல சவால்களை எதிர்கொண்டு 2007ல் COO பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் TCS நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 46. இந்த நிலையில் Ratan Tata தமது தலைவர் பொறுப்பை துறக்க முடிவு செய்தபோது, அவரது தெரிவு என் சந்திரசேகரன் என்றே இருந்தது.
டூப்ளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு
இதனால் TCS நிறுவனத்தின் தலைவர் பொறுப்புக்கும் முன்னேறினார். 2019ல் இவரது சம்பளம் என்பது ரூ 65 கோடி. ஆனால் 2021ல் அது ரூ 109 கோடியாக அதிகரித்தது. 2020ல் திடீரென்று செய்திகளில் இடம்பெற்றார்.
முகேஷ் அம்பானியின் பிரபலமான Antilia குடியிருப்புக்கு அருகே, ரூ 98 கோடி மதிப்பில் டூப்ளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கினார். தொழில் ரீதியாக பெரும் சாதனைகளை குவித்திருந்தாலும், சந்திரசேகரன் தற்போதும் எளிமையாகவே காணப்படுகிறார்.
ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து தமது கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர் தமிழரான என் சந்திரசேகரன்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |