சேரிப்பகுதியில் வசித்து வீடு தோறும் பால் விற்றவர்... இன்று சொத்து மதிப்பு ரூ 20830 கோடி
முதல் தலைமுறை தொழிலதிபர்கள் பலரும் தங்களின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் முன்னுக்கு வந்தவர்கள் தான். அப்படியான ஒருவர் தான் Danube குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான Rizwan Sajan.
வெறும் விற்பனையாளராக
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செயல்படும் வெளிநாட்டு வாழ் இந்திய தொழிலதிபர் அவர், வெறும் விற்பனையாளராக தனது பயணத்தைத் தொடங்கிய அவர் தற்போது துபாயில் பணக்கார இந்தியர்களில் ஒருவராக உள்ளார்.
இவரது Danube குழுமம் தற்போது பில்லியன் டொலர் குழுமமாக வளர்ந்துள்ளதுடன், கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் பெரும் நிறுவனங்களில் ஒன்று. ஐக்கிய அமீரகத்தில் மட்டுமின்றி, ஓமன், பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் இந்தியாவிலும் கிளைகள் செயல்பட்டு வருகிறது.
மும்பை நகரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ரிஸ்வான் சாஜன். தொடக்க நாட்களில் தெருவோரத்தில் புத்தகங்கள், பட்டாசு என விற்பனை செய்துள்ளார். ஒருகட்டத்தில் வீடு தோறும் பால் விற்பனையும் செய்துள்ளார்.
குடும்பத்தை காப்பாற்ற
16 வயதில் தந்தையை இழந்த நிலையில், குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவரை குவைத்தில் தமது உறவினரின் உதவை நாட வைத்தது. அவரது கட்டுமான விற்பனை பொருட்கள் கடையில் வேலை பார்த்துள்ளார்.
வியாபார உத்திகளை கற்றுக்கொண்ட சாஜன் அடுத்த கட்டத்திற்கு தம்மை தயார் படுத்திக்கொண்டார். 1993ல் சின்னதாய் Danube குழும நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
2019ல் Danube குழுமம் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டியுள்ளது. சாஜனின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. அதாவது ரூ 20,830 கோடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |