முன்னர் பாடசாலை ஆசிரியர்... தற்போது பல கோடிகள் மதிப்பிலான நிறுவனத்தின் உரிமையாளர்: இவரது தொழில்
செயலி ஊடாக சிறார்களுக்கு கல்வியை அளிக்கும் நிறுவனம் ஒன்றை துவங்கிய முன்னாள் ஆசிரியர் ஒருவர், அதில் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார்.
இணையமூடாக சிறார்களுக்கு கல்வி
சிங்கப்பூரில் பாலர் பள்ளி ஒன்றை துவங்கிய Prerna Jhunjhunwala அதை திறன்பட நிர்வகித்தும் வந்துள்ளார். இந்த நிலையில் இணையமூடாக சிறார்களுக்கு கல்வியை அளிக்கும் வகையில் Creative Galileo என்ற நிறுவனத்தை துவங்கினார்.
3 முதல் 10 வயதுடைய சிறார்களை இலக்காக கொண்டு இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. மட்டுமின்றி, இந்த செயலி வழியாக 3 முதல் 8 வயதுடைய சிறார்களுக்கு வாசிக்கும் திறனை வளர்க்க திட்டமிட்டனர்.
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் பெற்றவர் பிரேர்னா ஜுன்ஜுன்வாலா. இவரது நிறுவனம் இரண்டு செயலிகளை அறிமுகம் செய்தது. Toondemy மற்றும் Little Singham. இந்த இரு செயலிகளும் இதுவரை 1 கோடிக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
பல லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனத்தின் CEO... நாளுக்கு ரூ 37 லட்சம் சம்பளம் பெறும் தென்னிந்தியர்: யாரிவர்
சிறார்களுக்கான செயலி
மட்டுமின்றி, இந்திய அளவில் டாப் 20 செயலிகளில் பெரும் ஆதரவைப் பெற்ற சிறார்களுக்கான செயலி இதுவெனவும் கூறப்படுகிறது. நிறுவனம் ஒன்றை துவங்கும் முன்னர், தொழில் முறையான எவ்விதப் பயிற்சியும் பிரேர்னா ஜுன்ஜுன்வாலா முன்னெடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
2022ல் மட்டும் இவரது நிறுவனத்திற்கு சுமார் 60 கோடி முதலீடு கிடைத்துள்ளது. இவரது நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ 330 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |