ஏழ்மையில் வீடு வீடாக பேனாக்களை விற்றவர்... தற்போது ரூ.2,300 கோடி நிறுவனத்தின் உரிமையாளர்
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான Su-Kam நிறுவனத்தின் உரிமையாளர், தமது ஏழ்மையான நாட்களில் கல்வி செலவுகளுக்காக வீடு வீடாக பேனாக்களை விற்றுள்ளார்.
மருத்துவராக வேண்டும்
Su-Kam நிறுவனத்தின் உரிமையாளர் குன்வார் சச்தேவின் தந்தை ரயில்வே எழுத்தராக பணிபுரிந்துள்ளார். குன்வார் சச்தேவ் தனது தொடக்கக் கல்வியை தனியார் பள்ளியில் பயின்றார், ஆனால் நிதி நெருக்கடியின் காரணமாக அவர் மீதமுள்ள படிப்பை முடிக்க அரசாங்கப் பள்ளிக்கு மாற வேண்டியிருந்தது.
இருப்பினும், தாம் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. ஆனால் மருத்துவச் சேர்க்கை பெற முடியாததால் இந்தக் கனவை அவர் கைவிட்டார். மட்டுமின்றி, ஏழ்மை நிலை காரணமாக வீடு வீடாகச் சென்று பேனாக்களை விற்று தனது கல்விக்கான பணத்தை திரட்டினார்.
தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்து, குன்வார் மார்க்கெட்டிங் பிரிவில் கேபிள் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். அங்கு பணிபுரியும் போது, நாட்டின் கேபிள் தொழில் எதிர்காலத்தில் மிகவும் லாபகரமானதாக இருக்கும் என்பதை அவர் உணர்ந்தார்.
தொடர்ந்து தனது வேலையை விட்டுவிட்டு தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிலையில் தான் தமது வீட்டில் இருந்த ஒரு இன்வெர்ட்டர் மிக மோசமான நிலையில் இருப்பதை கண்டு அதை திறந்து பார்த்துள்ளார்.
சோலார் தயாரிப்புகளை
அப்போது தான் தெரிந்தது தரமற்ற பொருட்களால் அந்த இன்வெர்ட்டர் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை. இது தமது Su-Kam நிறுவனத்தில் இருந்து தரமான இன்வெர்ட்டர்களை தயாரிக்கும் முடிவுக்கு அவரை கொண்டு சென்றது.
1998ல் Su-Kam நிறுவனத்தில் இருந்து இன்வெர்ட்டர்களை தயாரிக்க தொடங்கினார். சமீப நாட்களில், குன்வார் சச்தேவின் நிறுவனம் பலவிதமான சோலார் தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது, அவை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பெரும் வணிகத்தை ஈர்த்துள்ளது.
Su-Kam நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ.2,300 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |