12 வயதில் காய்கறி வியாபாரி... இன்றோ ரூ.8,200 கோடிகளுக்கு சொந்தக்காரர்! யார் இவர்?
ஜப்பானில் ஏழ்மை காரணமாக 12 வயதில் காய்கறி விற்பனை கடை ஒன்றில் பணியாற்றத் தொடங்கியவர், தற்போது ரூ.8,200 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக உயர்ந்துள்ளார்.
12 வயதில் வேலைக்கு செல்லும் கட்டாயம்
ஜப்பானை சேர்ந்த மசாரு வசாமி தமது ஏழ்மை நிலை காரணமாக 12 வயதில் இருந்தே வேலைக்கு செல்லும் கட்டாயத்தில் தள்ளப்பட்டார். காய்கறி கடை ஒன்றில் பணியாற்றத் தொடங்கிய மசாரு வசாமி, காசநோயால் பாதிக்கப்பட்ட தமது தாயாருக்கு உதவும் பொருட்டே, வெறும் அப்பாவி சிறுவனாக இருந்துவிடாமல் வேலைக்கு செல்லத் தொடங்கினார்.
From internet
உலகம் அறியும் விளையாட்டு வீரனாக வேண்டும் என்ற கனவை உதறித் தள்ளிவிட்டு, 15 வயதில் முழு நேரம் வேலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார். பின்னர், லொறி சாரதியாக பணியாற்றத் தொடங்கிய மசாரு வசாமி, தமது எதிர்காலம் என்ன என்பதை புரிந்து கொண்டு, 1970ல் ஒற்றை லொறியுடன் நிறுவனம் ஒன்றை துவங்கினார்.
2014ல் தமது நிறுவனத்தை ஜப்பான் பங்குச்சந்தையிலும் பட்டியலிட்டார். உண்மையில் மசாரு வசாமியின் இந்த அசுர வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தவர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் என்றே கூறப்படுகிறது.
மொத்த சொத்து மதிப்பு ரூ.8.200 கோடி
மசாரு வசாமி தமது நிறுவனத்தை துவங்கிய சில ஆண்டுகளிலேயே, 100க்கும் அதிகமான லொறிகளை சொந்தமாக்கினார். அத்துடன் ஜப்பானின் முக்கிய பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்து நிறுவனங்களின் வர்த்தக ரீதியான போக்குவரத்து மொத்தமும் இவரது நிறுவனமே முன்னெடுத்தது.
From Internet
மட்டுமின்றி, 2017ல் அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, ஒரே நாளில் பொருட்களை விநியோகிக்கும் சேவையை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளார்.
இந்த அசுர வளர்ச்சிக்கு பின்னால் கடின உழைப்பும் இருந்தது என்பதுடன், தற்போது 77 வயதாகும் மசாரு வசாமியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.8.200 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |