அன்று ஹொட்டல் ஊழியர்... இன்று முகேஷ் அம்பானியுடன் இணைந்து தொழில்: அவரின் சொத்து மதிப்பு
இள வயதில் நாட்டைவிட்டு வெளியேறி ஹொட்டல் ஒன்றில் உணவு பரிமாறியவர், இந்தியாவில் ரிலையன்ஸ் மற்றும் டாடா குழுமங்களுடன் கூட்டு சேர்ந்து முதலீடு செய்யவிருக்கும் அவர் இன்று உலகின் 26வது கோடீஸ்வரர்.
தொழில்நுட்ப நிறுவனம் Nvidia
அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனம் Nvidia இந்தியாவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் டாடா குழுமங்களுடன் கூட்டு சேர்ந்து முதலீடு செய்யவிருக்கிறது.
Nvidia நிறுவனமானது தைவானில் பிறந்த அமெரிக்கரான பெரும் கோடீஸ்வரர் Jensen Huang என்பவருக்கு சொந்தமானதாகும். சமீபத்தில் இவர் இந்தியாவில் தொழில்முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு துறை சார்ந்த பிரபலங்களுடன் சந்திப்பும் நடத்தியுள்ளார்.
ரிலையன்ஸ் மற்றும் டாடா குழுமங்களுடன் கூட்டு சேர்ந்து முதலீடு செய்யவிருப்பதை குறிப்பிட்ட Jensen Huang, மிக விரைவில் உலகின் மிகப்பெரிய AI சந்தைகளில் ஒன்றாக இந்தியா மாறப் போகிறது என கணித்துள்ளார்.
உலகின் 26வது கோடீஸ்வரராக அறியப்படும் ஜென்சன் ஹுவாங்கின் மொத்த சொத்து மதிப்பு (40.7 பில்லியன் டொலர்) 3,38,000 கோடி என்றே கூறப்படுகிறது. 1993ல் Nvidia நிறுவனத்தை நிறுவிய ஜென்சன் ஹுவாங், தற்போதும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
சந்தை மதிப்பு 93,51,500 கோடி
Nvidia நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 93,51,500 கோடி என்றே தெரிய வந்துள்ளது. அதாவது 1.13 டிரில்லியன் டொலராகும். ஜென்சன் ஹுவாங் தைவானில் பிறந்தாலும், சிறு வயதிலேயே குடும்பத்துடன் தாய்லாந்தில் குடியேறியுள்ளனர்.
ஆனால் தாய்லாந்திலும் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், ஜென்சன் ஹுவாங் மற்றும் அவரது சகோதரரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது 60 வயதாகும் ஜென்சன் ஹுவாங் ஒரேகான் மாகாண பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்.
அமெரிக்காவில் புலம்பெயர்ந்து தத்தளித்த நாட்களில் ஹொட்டல் ஒன்றில் ஊழியராகவும் பணியாற்றியுள்ளார் ஜென்சன் ஹுவாங்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |