முன்பு ஹொட்டல் ஊழியர்... இன்று முகேஷ் அம்பானி, ரத்தன் டாடாவை விட கோடீஸ்வரர்
பெரும் லட்சியங்களுடன் ஹொட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்துவந்த நபர், இன்று உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார்.
5 ஆண்டுகளில் 2280 சதவிகிதம்
தைவான் நாட்டில் பிறந்து தற்போது அமெரிக்காவில் குடிபெயர்ந்துள்ள Jensen Huang என்பவரே அந்த நபர். Nvidia நிறுவனத்தின் நிறுவனரான இவர், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
உலகின் 11வது பெரும் கோடீஸ்வரராக அறியப்படும் Jensen Huang-ன் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 2280 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஜூன் 18ம் திகதி மட்டும் இவரது நிறுவனப் பங்குகள் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளதை அடுத்து, Jensen Huang-ன் சொத்து மதிப்பு 119 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
1993ல் Nvidia நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து, தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தலைவராகவும் இருந்து வருகிறார். 1999ல் Nvidia நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக மாறியது. அதன் பின்னரே பெரும் வளர்ச்சி கண்டது என கூறப்படுகிறது.
Nvidia நிறுவனத்தில் 3 சதவிகித பங்குகளை கொண்டுள்ளார் Jensen Huang. மேலும் 2024 தொடக்கத்தில் இவரது சொத்து மதிப்பு 77 பில்லியன் டொலர் என இருந்த நிலையில், தற்போது Nvidia நிறுவனத்தின் சந்தை மதிப்பு 177 சதவிகிதம் அதிகரித்து 3.33 ட்ரில்லியன் டொலர் என உயர்ந்துள்ளது.
2019ல் உலகின் 546வது பெரும் கோடீஸ்வரர் என பட்டியலிடப்பட்ட Jensen Huang, வெறும் 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்து 114 பில்லியன் டொலர் என உயர்ந்தது.
4 பில்லியன் டொலர் அதிகரித்து
கடந்த ஆண்டு உலகின் 76வது பெரும் கோடீஸ்வரராக பட்டியலிடப்பட்டார். தற்போது அவரது சொத்து மதிப்பில் 4 பில்லியன் டொலர் அதிகரித்து உலகின் 11வது பெரும் கோடீஸ்வர் என ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது.
இதனால் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடாவை விட கோடீஸ்வரர் என்ற நிலைக்கு அவர் உயர்ந்துள்ளார். தைவானில் பிறந்த Jensen Huang, ஐந்து வயதாக இருக்கும் போது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு குடிபெயர்ந்தார்.
9வது வயதில் சகோதரருடன் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் உறவினர் குடியிருப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் பாடசாலை மற்றும் கல்லூரி, பல்கலைக்கழக படிப்பு வரையில் அமெரிக்காவிலேயே முடித்துக்கொண்டார்.
அமெரிக்காவில் வசிக்கும் போது தான் Jensen Huang அங்குள்ள Denny's உணவகம் ஒன்றில் ஊழியராக பணியாற்றியுள்ளார்.
ஆனால் Nvidia நிறுவனம் தொடங்கப்பட்ட பின்னர் 2007ல் அமெரிக்காவிலாயே அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளில் 61வது இடத்தில் ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டது. ஆண்டுக்கு 24.6 மில்லியன் சம்பளமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |