ஒரேயடியாக 70 பில்லியன் டொலர் சொத்தை இழந்த உலகின் பெரிய கோடீஸ்வரர்: அவரது தற்போதைய நிலை
ஜப்பானிய கோடீஸ்வரரான Masayoshi Son பங்குச் சந்தை சரிவு காரணமாக தமது மொத்த சொத்தில் சுமார் 70 பில்லியன் டொலர் வரையில் ஒரேயடியாக இழந்தவர்.
SoftBank குழுமத்தின் தலைவர்
ஜப்பானியரான Masayoshi Son ஒரு காலகட்டத்தில் பில் கேட்ஸ், ஜெஃப் பெசோஸ், முகேஷ் அம்பானி, கௌதம் அதானி உள்ளிட்டவர்களைவிட பெரும் கோடீஸ்வரராக இருந்தார்.
ஆனால் பெரும் பின்னடைவை எதிர்கொண்டு, தற்போது அந்த சரிவில் இருந்து மீண்டுள்ளார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு 23 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
ஆனால் முகேஷ் அம்பானி 92 பில்லியன் சொத்து மதிப்புடன் ஆசியாவிலேயே பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். SoftBank குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Masayoshi Son ஜப்பானில் பிறந்தவர் என்பதுடன், 3வது தலைமுறை Zainichi கொரியர்.
இவரது தந்தை சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, நகரத்திலேயே முதன் முறையாக கார் வாங்கியதும் இவர்களே என கூறப்படுகிறது.
ஜப்பானில் பாடசாலை கல்வியை முடித்த Masayoshi Son, பட்டப்படிப்பை அமெரிக்காவின் Berkeley கல்லூரியில் முடித்துள்ளார். தொடர்ந்து Unison World என்ற video game நிறுவனத்தை சொந்தமாக தொடங்கியவர், பின்னர் அதை சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்றுள்ளார்.
தவறான முதலீடுகளால்
இந்த தொகையைக் கொண்டு 1981ல் SoftBank நிறுவனத்தை நிறுவினார். மட்டுமின்றி, யாஹூ மற்றும் அலிபாபா நிறுவனங்களின் துவக்க நாட்களில் முதலீடு செய்த Masayoshi Son இதனூடாக பெருந்தொகை வருவாய் ஈட்டினார்.
பங்குச் சந்தை சரிவுக்கு முன்னர் இவரது சொத்து மதிப்பு என்பது 78 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. ஆனால் தவறான முதலீடுகளால் அதை ஒரேயடியாக இழந்த Masayoshi Son, இறுதியில் 8 பில்லியன் டொலர்கள் மட்டுமே சொத்தாக மிஞ்சியுள்ளது
இந்த நிலையில் 2006ல் Vodafone ஜப்பான் உரிமையை கைப்பற்றிய Masayoshi Son, அதன் பின்னர் இழந்த சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக மீட்கத் துவங்கியுள்ளார். தற்போதைய அவரது சொத்து மதிப்பு 23 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |