ரஷ்ய விமானத்தை சிறைபிடித்து பிரித்தானியா அதிரடி!
பிரித்தானியாவில் ரஷ்ய விமானம் ஒன்றை எற்கனவே சிறைபிடித்துள்ளதாக போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய விமானங்கள், விண்வெளி மற்றும் விமான தொழில்நுட்ப ஏற்றுமதியை பாதிக்கும் புதிய தடைகளை பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானியா வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் அறிவித்துள்ள இந்த நடவடிக்கைகள், பிரித்தானியாவில் ரஷ்ய விமானங்களை சிறைபிடித்து வைக்க அரசாங்கத்திற்கு அதிகாரங்களை வழங்கும்.
மேலும், ரஷ்ய விமானங்கள் பிரித்தானியாவில் பறப்பது அல்லது நாட்டில் தரையிறக்குவது கிரிமினல் குற்றமாக ஆக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் ரஷ்யாவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் மேலும் பொருளாதார வலியை ஏற்படுத்தும் என்று டிரஸ் கூறினார்.
ரஷ்ய விமானத்தை சிறைபிடிக்கும் அதிகாரம் உள்ளடக்கிய பிரித்தானியா விமானப் போக்குவரத்துத் தடைகள் அறிவித்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே ஒரு விமானத்தை சந்தேகத்தின் அடிப்படையில் சிறைபிடித்துள்ளதாக போக்குவரத்துச் செயலர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
Farnborough விமான நிலையத்தில் வைத்து குறித்து விமானம் சிறைபிடிக்கப்பட்டதாகவும், தற்போது விமானத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.