பிரபல One Direction நட்சத்திரம் பரிதாப மரணம்.. மொத்தமாக நொறுங்கிப்போன ரசிகர்கள்
One Direction இசைக்குழுவின் முன்னாள் நட்சத்திரம் Liam Payne ஹொட்டல் ஒன்றின் பால்கனியில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அவரது ரசிகர்களை மொத்தமாக உலுக்கியுள்ளது.
அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்
பாடகர் Liam Payne தமது நண்பரான Niall Horan என்பவரது இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு பியூனஸ் அயர்ஸ் சென்றிருந்தார். இந்த நிலையில் புதன்கிழமை மதியத்திற்கு மேல் அவர் தங்கியிருந்த ஹொட்டல் அறையின் பால்கனியில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
CasaSur ஹொட்டலில் அவர் தங்கியிருந்துள்ளார். விபத்துக்கு முன்னர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். 31 வயதான பாடகர் Liam Payne மரணமடைந்த தகவல் தீயாக பரவ, அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் அவர் தங்கியிருந்த ஹொட்டலில் திரண்டுள்ளனர்.
இதனிடையே, போதை மருந்து அல்லது மது அருந்தியுள்ள ஒருவர் வன்முறையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டு ஹொட்டல் ஊழியர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
வன்முறையில் ஈடுபட்ட நபர் Liam Payne என்றும், தமது மடிக்கணியை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதாகவும், பின்னர் ஹொட்டல் ஊழியர்களே அவர் தங்கியிருந்த அறைக்கு அவரை அனுப்பிவைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் சுமார் 5 மணியளவில், பால்கனியில் இருந்து தவறி விழுந்து Liam Payne மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நட்சத்திரங்கள் இரங்கல்
நடந்த சம்பவத்தை உள்ளூர் பொலிசாரும் உறுதி செய்துள்ளனர். Liam Payne மறைவுக்கு அவரது ரசிகர்களைப் போன்று பல்வேறு பிரபல நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
One Direction இசைக்குழுவினர் தனித்தனியாக பிரிந்து செல்லும் வரையில், 2010 முதல் 2016 வரையில் அந்த இசைக்குழுவின் முதன்மையான பாடலாசிரியர்களில் ஒருவராக இருந்தார் Liam Payne.
கடந்த 2019ல் தனியாக ஒரு இசைத்தொகுப்பை வெளியிட்டார். தனது இரண்டாவது இசைத்தொகுப்பை விரைவில் வெளியிட இருப்பதாக அறிவித்திருந்த Liam Payne, அந்த முடிவை கைவிட்டார் என்றே தகவல் வெளியானது.
கடந்த 2010ல் லண்டனில் Niall Horan, Liam Payne, Harry Styles, Louis Tomlinson, மற்றும் Zayn Malik ஆகிய ஐவர் சேர்ந்து One Direction என்ற இசைக்குழுவை உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |