இன்று ஒரு நாள் மட்டுமே: பிரான்சில் விற்பனை செய்யப்படும் ஒரு யூரோ பயணச்சீட்டு
இன்று ஒரு நாள் மட்டும் ஒரு யூரோ பயணச்சீட்டு ஒன்று பிரான்சில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு யூரோ பயணச்சீட்டு
Ouigo என்பது, பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்ட பட்ஜெட் ரயில் சேவை ஆகும். இந்த சேவையின் கீழ், பிரான்ஸ் ரயில்வே அமைப்பு, குறைந்த கட்டணத்தில் அதிவேக ரயில்களை முக்கிய நகரங்கள் சிலவற்றிற்கிடையில் இயக்கிவருகிறது.
இந்த ரயில்களில் முன்கூட்டியே இருக்கை முன்பதிவு செய்தால், 10 யூரோ கட்டணத்துக்கே இருக்கை கிடைக்கும். ஆனால், பயணம் செய்யும் அன்று பயணச்சீட்டு பெற்றால், அது சற்று விலை அதிகமாக இருக்கும்.
ஆக, Ouigo சேவை துவக்கப்பட்டதன் ஓராண்டு நிறைவையொட்டி, இன்று ஒரு நாள் மட்டும் ஒரு யூரோவுக்கு பயணச்சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் 10,000 ஒரு யூரோ பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்த பயணச்சீட்டை எப்போது பயன்படுத்தலாம்?
இந்த ஒரு யூரோ பயணச்சீட்டைக் கொண்டு, இம்மாதம் 24ஆம் திகதி முதல், ஜூன் மாதம் 5ஆம் திகதி (29 மே தவிர) வரை பயணம் செய்யலாம்.