பிரான்சில் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு! போலி கொரோனா பாஸால் நடந்த விபரீதம்
பிரான்சில் இரவு விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
பிரான்சில் கிழக்கு நகரமான Montbeliard-ல் உள்ள இரவு விடுதிக்கு கடந்த வியாழக் கிழமை இரண்டு பேர் Covid-19 pass உடன் சென்றுள்ளனர்.
ஆனால், அதில் ஒருவரது Covid-19 pass போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்கள் விடுதிக்குள் நுழைய மறுக்கப்பட்டனர்.
அதன் பின் சிறிது நேரம் கழித்து காரில் வந்த இந்த ஜோடி, விடுதியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால், விடுதிக்கு வந்திருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பட்டது.
இதில் காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருக்கு காலில் தான் காயம் ஏற்பட்டுள்ளதால், உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் முதல் பிரான்சில் உள்ள உணவகங்கள், இரவு விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் சினிமாக்கள் போன்ற பொது இடங்களில் நுழைய Covid-19 pass-ஐ அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இந்த Covid-19 pass காகித வடிவிலோ அல்லது QR குறியீடாகக் கிடைக்கிறது. அதை ஸ்கேன் செய்து பார்த்தால், அவர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர், சமீபத்தில் இவருக்கு கொரோனா பாசிட்டிவ் இல்லை.
கொரோனா மற்றும் அதிலிருந்து மீண்டவர் என்பதை அது காண்பிக்கும், போன்ற பல தகவல்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.