ஜேர்மனியில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தையில்லையாம்: காரணங்களை விளக்கும் நிபுணர்
ஜேர்மனியில் குழந்தை பெறும் வயதைக் கடந்த பெண்களில் ஐந்தில் ஒருவருக்குக் குழந்தைகள் இல்லையாம். ஜேர்மனியின் புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மாறாத எண்ணிக்கை
45 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட ஜேர்மன் பெண்களில், ஐந்தில் ஒருவருக்கு குழந்தைகள் இல்லை.
இன்னொரு விடயம் என்னவென்றால், குழந்தையின்மை வீதம் கடந்த 10 ஆண்டுகளாக மாறாமல் உள்ளது.
அதாவது, குழந்தை பெறும் வயதைக் கடந்த பெண்களில் 20 சதவிகிதம் பேர் குழந்தையில்லாதவர்கள் என்பது 10 ஆண்டுகளாக மாறாத எண்ணிக்கையாகவே உள்ளது.
15 ஆண்டுகளுக்குமுன் இந்த எண்ணிக்கை 17 சதவிகிதமாக இருந்தது.
எதனால் பெண்களுக்கு குழந்தைகள் இல்லை என்பதற்கான காரணத்தை எளிமையாக விளக்குகிறார் Martin Bujard என்னும் நிபுணர்.
எனக்குக் குழந்தையே வேண்டாம் என்ற எண்ணம் கொண்ட பெண்கள் இருக்கிறார்கள், குழந்தை பெற இயலாத பெண்களும் இருக்கிறார்கள், சரியான துணை கிடைக்காமல் நீண்ட காலம் காத்திருந்ததால் குழந்தை பிறக்காத பெண்களும் இருக்கிறார்கள் என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |