அமுலுக்கு வந்த பிரித்தானியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: முதல் புலம்பெயர்ந்தவர் தடுத்து வைப்பு!
பிரித்தானியா-பிரான்ஸ் இடையிலான புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் புலம்பெயர்ந்தவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியா-பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம்
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட “ஒருவர் உள்ளே, ஒருவர் வெளியே” (one in, one out) நாடுகடத்தல் ஒப்பந்தத்தின் கீழ் ஆங்கில கால்வாயை கடந்த புலம்பெயர்ந்தவர் முதல் நபராக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தடுத்து வைக்கப்படும் நபர்கள் பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை அவர்கள் புலம்பெயர்ந்தோர் தடுப்பு மையங்களில் வைக்கப்படுவார்கள் என உள்துறை அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
முதல் நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்த முன்னோடி திட்டம் அமுலுக்கு வந்த புதன்கிழமை டோவாரில் உள்ள கடலோர எல்லைப்படையின் படகுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர் இறங்குவதை புகைப்படத்தில் பார்க்க முடிந்தது.
சவால்களை சந்திக்க தயார்
இருப்பினும், தற்போது எத்தனை புலம்பெயர்ந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
புலம்பெயர்ந்தவர்களை பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பும் திட்டத்தை எதிர்க்கும் எந்தவொரு சவால்களையும் எதிர்க்க உள்துறை தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் 25,000-ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |