விலைவாசி உயர்வு: பிரித்தானியாவில் ஒருவேளை உணவைத் தவிர்க்கும் ஆறு பணியாளர்களில் ஒருவர்
பிரித்தானியாவில் மளிகைப்பொருட்கள், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துவருவதால் வேலை செய்யும் பிரித்தானியர்களில் ஆறில் ஒருவர், குறைந்தது ஒருவேளை உணவைத் தவிர்ப்பதாக ஆய்வமைப்பு ஒன்று தெரிவிக்கிறது.
ஒருவேளை உணவைத் தவிர்க்கும் பிரித்தானியர்கள்
விலைவாசி உயர்வு காரணமாக, குடும்பச் செலவுகளை சமாளிப்பதற்காக, பிரித்தானியாவில் வேலையில் இருப்பவர்களில் ஆறில் ஒருவர் குறைந்தது ஒருவேளை உணவைத் தவிர்ப்பதாக வர்த்தக அமைப்பான Trades Union Congress (TUC) தெரிவிக்கிறது.
அந்த அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த மூன்று மாதங்களில், முழு நேர அல்லது பகுதி நேர வேலை செய்யும் பிரித்தானியர்களில் 17 சதவிகிதம் பேர், செலவுகளை சமாளிப்பதற்காக குறைந்தது ஒருவேளை உணவைத் தவிர்த்துள்ளார்கள்.
அதேபோல, YouGov என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வில், பத்தில் ஒருவர் பெரும்பாலான நாட்களில் அல்லது தினமும் ஒருவேளை உணவைத் தவிர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மக்களின் இன்றைய நிலைமைக்கு கடந்த 14 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் மோசமான ஆட்சியே காரணம் என பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஆகவே, தற்போது ஆளும் லேபர் அரசு, பணியாளர்கள் விடயத்தில் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |