பிரான்ஸ் நகரில் துப்பாக்கிச் சூடு! பொலிஸ் உட்பட பலர் கைது
பிரான்ஸின் நைஸ் நகரில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஸ் நகரின் Buffa மாவட்டத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து பப்ளிக் பிராசிகியூட்டர் Xavier Bonhomme அளித்த தகவலின் படி, டிசம்பர் 24ம் திகதி Las Planas-ல் நடந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை பிடிக்கும் நடவடிக்கையின் போது, பொலிஸ் அதிகாரி நட்ததிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
காவல்துறை நடவடிக்கை தவறாகிவிட்டது. பொலிஸ் அதிகாரி ஒருவர், சம்பவயிடத்தில் இருந்து பொதுமக்களில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் மதியம் 12.30 மணியளவில் உயிரிழந்தார்.
தன்னிச்சையான படுகொலை பற்றிய விசாரணைக்காக நான் இந்த விஷயத்தை IGPN-க்கு பரிந்துரைத்துள்ளேன்.
துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து எந்த ஆயுதமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பொலிஸ் காவலில் உள்ளனர்.
சந்தேக நபர்களின் கார் சோதனையிடப்பட்டு வருகிறது என பப்ளிக் பிராசிகியூட்டர் Xavier Bonhomme தகவல் தெரிவித்துள்ளார்.
Opération de Police en cours, 7 rue de la BUFFA à Nice.
— Police Nationale 06 (@PoliceNat06) January 19, 2022
Restriction de circulation, éviter le secteur. pic.twitter.com/KVJ0tb0ZHg